'மாஜி' முதல்வர் எடியூரப்பா மீது வழக்குபதிவு செய்தது லோக் ஆயுக்தா

Updated : செப் 18, 2022 | Added : செப் 18, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
பெங்களூரு : ஊழல் வழக்கு தொடர்பாக, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன், மருமகன்கள், பேரன் உட்பட ஒன்பது பேர் மீது, கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 2008 --- 10ல் எடியூரப்பா முதல்வராக இருந்த போது, அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு
மாஜி முதல்வர், எடியூரப்பா, வழக்குபதிவு, லோக் ஆயுக்தா,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



பெங்களூரு : ஊழல் வழக்கு தொடர்பாக, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன், மருமகன்கள், பேரன் உட்பட ஒன்பது பேர் மீது, கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 2008 --- 10ல் எடியூரப்பா முதல்வராக இருந்த போது, அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு ஒப்பந்தங்களை வழங்குவதிலும், பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் வீட்டுமனைகள் வழங்கியதிலும் முறைகேடுகள் நடந்தன. இதில் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம், 12 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதைப் பற்றி விசாரணை நடத்தும்படி, பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆப்ரஹாம், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.


latest tamil news


இந்நிலையில், 'எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கு குறித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். 'வரும் நவம்பர் 2க்குள் அறிக்கை அளிக்க வேண்டும்' என, லோக் ஆயுக்தா போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, மக்கள் பிரதிநிதிதிகள் சிறப்பு நீதிமன்றம், 14ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, எடியூரப்பா, அவரது இளைய மகன் விஜயேந்திரா, பேரன் சசிதர் மரடி, மருமகன்கள் சஞ்சய் ஸ்ரீ, விருபாக் ஷப்பா யமகனமரடி, கூட்டுறவு துறை அமைச்சர் சோமசேகர், ஒப்பந்ததாரர் சந்திரகாந்த் ராமலிங்கம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பிரகாஷ், ரவி ஆகிய ஒன்பது பேர் மீது லோக் ஆயுக்தா போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.இதனால் எடியூரப்பா குடும்பத்தினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் லோக் ஆயுக்தா வழக்கில் முதல்வர் பதவியை இழந்து, சிறைக்கு சென்றது குறிப்பிடத் தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பைரவர் சம்பத் குமார் 1). உண்மையெனில் இந்த தேவையில்லாத ஆணியை பாஜக பிடுங்கி எறிய வேண்டும்.2). தவறுகளை கண்டறிந்து களைந்து எடுத்து விட வேண்டும். நன்றி ஐயா வணக்கம் .
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
18-செப்-202215:38:19 IST Report Abuse
Raj மற்ற பிஜேபி முதல்வர்கள் எபபோது மட்டுவார்கள்?
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
18-செப்-202214:01:30 IST Report Abuse
Nellai tamilan தவறு யார் செய்தலும் தவறு தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X