தி.மு.க., - எம்.பி., ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Added : செப் 18, 2022 | |
Advertisement
ஹிந்துக்களை இழிவாக பேசிய, தி.மு.க., - எம்.பி., ராஜாவை கண்டித்து, தர்மபுரி, டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வேடியப்பன் முன்னிலை வகித்தார். இதில், ஹிந்துக்களையும் ஹிந்து தெய்வங்களையும் இழிவு படுத்தி, தி.மு.க., - எம்.பி., ராஜா பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசி


ஹிந்துக்களை இழிவாக பேசிய, தி.மு.க., - எம்.பி., ராஜாவை கண்டித்து, தர்மபுரி, டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் முனுசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் வேடியப்பன் முன்னிலை வகித்தார். இதில், ஹிந்துக்களையும் ஹிந்து தெய்வங்களையும் இழிவு படுத்தி, தி.மு.க., - எம்.பி., ராஜா பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். கடவுள்களை வணங்கி வரும் பக்தர்களை இழிவாக பேசி வரும் அவரை, உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும். மேலும், இவரை கைது செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சபரி, சிறப்பு பேச்சாளர் முரளி, பா.ஜ., மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்பட
பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X