கணவரை அடித்து கொன்ற மனைவி, கள்ளக்காதலன் உட்பட 4 பேர் கைது

Added : செப் 18, 2022 | |
Advertisement
தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி போடரான்கொட்டாயை சேர்ந்தவர் கோவிந்தன், 37; இவர் கடந்த ஜூலை, 23ல் தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, தொப்பூர் போலீசார் விசாரித்து வந்தனர். இதில் கோவிந்தன் மனைவி கவிதா, 32, மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவிந்தனுடன், ஆந்திராவிலுள்ள செங்கல்சூளையில்


தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி போடரான்கொட்டாயை சேர்ந்தவர் கோவிந்தன், 37; இவர் கடந்த ஜூலை, 23ல் தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து, தொப்பூர் போலீசார் விசாரித்து வந்தனர். இதில் கோவிந்தன் மனைவி கவிதா, 32, மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவிந்தனுடன், ஆந்திராவிலுள்ள செங்கல்
சூளையில் பணியாற்றியபோது, கவிதாவுக்கும், அங்கு பணியாற்றிய சேலம் மாவட்டம், தீவட்டிப்
பட்டியை சேர்ந்த தனசேகர், 44, என்பவருக்கும், கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது கோவிந்தனுக்கு தெரிந்தது, கவிதாவை எச்சரித்த அவர், தன் சொந்த ஊரான போடரான் கொட்டாய்க்கு மனைவியை அழைந்து வந்துள்ளார்.
இதனால், ஏமாற்றமடைந்த கவிதா, தன் கள்ளக்காதலன் தனசேகர் மூலம், கோவிந்தனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து கவிதா, தன் கள்ளக்காதலன் தனசேகர், அவரது நண்பர்கள் இளையராஜா, பழனிசாமி ஆகியோருடன் சேர்ந்து, இரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த கோவிந்தனை அடித்து கொலை செய்துள்ளார். நேற்று முன்தினம் தொப்பூர் போலீசார், கவிதா, கள்ளக்
காதலன் தனசேகர், அவரது நண்பர்கள் இளையராஜா, பழனிசாமி ஆகியோரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X