தசைப்பிடிப்பை தவிர்க்க என்ன வழி?| Dinamalar

தசைப்பிடிப்பை தவிர்க்க என்ன வழி?

Added : செப் 18, 2022 | |
இரவில் துாக்கத்தில் முழங்கால் தசைகளிலோ, தொடை தசைகளிலோ வலி ஏற்பட்டு திடீரென விழித்து கொள்கிறீர்களா. இதற்கு காரணம் தசைகளில் ஏற்படும் பிடிப்பாகும். இதை 'மஸில் கிராம்ப்ஸ்' என்பர். 'குரக்க வலி' என்றும் கூட கூறுவர்.இரண்டாவது இதயம்முழங்கால் கெண்டை தசைகள் நன்கு வேலை செய்வதால் இதயத்திற்கு ரத்த ஓட்டம் சீராக செல்கிறது. இதை இரண்டாவது இதயம் என கூறுவர். சாதாரணமாக ஒரு
Muscle_Cramps, தசைப்பிடிப்பு

இரவில் துாக்கத்தில் முழங்கால் தசைகளிலோ, தொடை தசைகளிலோ வலி ஏற்பட்டு திடீரென விழித்து கொள்கிறீர்களா. இதற்கு காரணம் தசைகளில் ஏற்படும் பிடிப்பாகும். இதை 'மஸில் கிராம்ப்ஸ்' என்பர். 'குரக்க வலி' என்றும் கூட கூறுவர்.
இரண்டாவது இதயம்முழங்கால் கெண்டை தசைகள் நன்கு வேலை செய்வதால் இதயத்திற்கு ரத்த ஓட்டம் சீராக செல்கிறது. இதை இரண்டாவது இதயம் என கூறுவர். சாதாரணமாக ஒரு மூட்டை(மூட்டு) முன்புறமாக இயக்கும் போது முன்புறத்தசைகள் சுருங்குவதும், பின்புற தசைகள் விரிவடைவதும் வழக்கம். அசைவுகள் எதுவுமே இல்லாமல் தசைகள் சுருங்கும் போது தசை பிடிப்பு ஏற்படுகிறது.
காரணம் என்னதசைத்திறன் குறைவு, அதிக நேரம் தசைகளை பயன்படுத்தாமல் இருத்தல், தாது உப்புக்களின் அளவு குறைதல், நீர்ச்சத்து குறைதல், வார்ம்அப் செய்யாமல் நேரடியாக உடற்பயிற்சி செய்தல் மற்றும் நரம்பை பாதிக்கும் நோய்களின் தாக்கம் ஆகியவை இதற்கு காரணமாகும். கர்ப்பிணிகளுக்கு கூட இது அடிக்கடி வருவதுண்டு. தசைகள் நன்கு இயங்குவதற்கு சோடியம், பொட்டாசியம் மிக முக்கியமானதாகும். பொட்டாசியம் சாதாரணமாக ஆண்களுக்கு தினமும் 3,400 மில்லிகிராம், பெண்களுக்கு 2,600 மில்லிகிராம் கர்ப்பிணிகளுக்கு 2,900 மில்லிகிராம் என்ற அளவில் தேவை. இந்த அளவு குறையும் போதும் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து குறையும் தசை பிடிப்பு ஏற்படுகிறது.
தடுப்பது எப்படிதசைகள் திடீரென்று சுருங்குவதால் இந்த வலி ஏற்படுவதால் அந்த தசைகளை மசாஜ் செய்வதன் மூலமும், சுடுநீர் அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுப்பதன் மூலமும் சரி செய்யலாம். சுருங்கி இருக்கும் தசைகளை ரிலாக்ஸ் பண்ணுவதன் மூலம் வலி குறையும் வாய்ப்பு உண்டு. உதாரணமாக கெண்டைக்கால் தசைகள் பிடித்து கொண்டால் முழங்காலை மடக்கி கைகளினால் பாதத்தை மேல்நோக்கி அசைப்பதன் மூலம் இந்த தசைகள் ரிலாக்ஸ் ஆக வாய்ப்புண்டு.பாதத்தை மேல் நோக்கி அசைப்பதன் மூலம் தசைகளை ரிலாக்ஸ் செய்யலாம். முன்னங்கால்களால் நடக்காமல் குதிகால்களினால் நடப்பதும் நல்ல பலன் தரும். உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்வது முக்கியமாகும். பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளான ஆரஞ்சு ஜூஸ், வாழைப்பழம், இளநீர், குடைமிளகாய், வேக வைத்த உருளைக்கிழங்கு ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம்.மேலும் நரம்பிற்கு அதிக சக்தியூட்டும் பி1, பி6, பி12 வைட்டமின் மாத்திரைகள், பல வகை வைட்மின்கள் உள்ள மாத்திரைகள் இப்பிரச்னைக்கு நல்ல பலனை அளிக்கும்.தசைத்திறனை அதிகரிக்கச் செய்யும் எல் கார்னிட்டின் என்ற அமினோ அமிலம் கொழுப்பு சத்தை நம் உடலின் செல்களில் அமைந்துள்ள மைட்டோகாண்ட்ரியா பகுதிக்குள் செலுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த மாத்திரைகளும் தசைப்பிடிப்பை சரி செய்யும்.எனவே உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்போம்! தாது உப்புக்கள் குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்! தசைப்பிடிப்பிடிப்பிலிருந்து மீள்வோம்!-


டாக்டர் பி.எஸ்.சண்முகம் முடநீக்கியல் வல்லுனர் மதுரை. 94437 15525


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X