மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Added : செப் 18, 2022 | |
Advertisement
கரூர் மாவட்டத்தில் இன்று, 1,513 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் இன்று காலை, 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், 1,513 மையங்களில் நடக்கிறது. கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி அவசியமாகும்.மாவட்டத்தில், 12 -- 14 வயதுடைய பள்ளி


கரூர் மாவட்டத்தில் இன்று, 1,513 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் இன்று காலை, 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், 1,513 மையங்களில் நடக்கிறது. கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி அவசியமாகும்.
மாவட்டத்தில், 12 -- 14 வயதுடைய பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் 15- - 18 வயதுடையவர்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் சதவீதம் குறைவாக உள்ளது. அவர்களுக்கு கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே, இவ்வயதுடையவர்கள் சிறப்பு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், 75வது சுதந்திர தினத்தை ஒட்டி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி அரசு மையங்களிலேயே வரும் 30ம் தேதி வரை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம். இன்னும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் நிலுவையில் உள்ளவர்கள் மொத்தம், 46 ஆயிரத்து, 826 பேர், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுடையவர்கள் 5 லட்சத்து, 49 ஆயிரத்து, 695 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X