கவுன்சிலிங் கேட்டு வரையணும் டாட்டூ: ஆர்டிஸ்ட் முத்தமிழ்

Added : செப் 18, 2022 | |
Advertisement
'இந்த பேஷன் உலகில் 'டாட்டூ' தவிர்க்க முடியாததாகி விட்டது... அதற்காக எப்படியும் வரையலாம் என வரையக் கூடாது... வரைந்து கொள்பவரின் ஆரோக்கியத்தை கேட்ட பின் தான் வரைய வேண்டும் என்ற கொள்கையை கடுமையாக பின்பற்றுகிறேன்' என்கிறார் மதுரை டாட்டூ ஆர்டிஸ்ட் முத்தமிழ்...''எம்.எஸ்.சி., படித்த நான் முறைப்படி டாட்டூ வரைய கற்றேன். 5 ஆண்டுகளாக டாட்டூ கலைஞராக இருக்கிறேன். இன்றைய
கவுன்சிலிங், டாட்டூ, ஆர்டிஸ்ட், முத்தமிழ்


'இந்த பேஷன் உலகில் 'டாட்டூ' தவிர்க்க முடியாததாகி விட்டது... அதற்காக எப்படியும் வரையலாம் என வரையக் கூடாது... வரைந்து கொள்பவரின் ஆரோக்கியத்தை கேட்ட பின் தான் வரைய வேண்டும் என்ற கொள்கையை கடுமையாக பின்பற்றுகிறேன்' என்கிறார் மதுரை டாட்டூ ஆர்டிஸ்ட் முத்தமிழ்...

''எம்.எஸ்.சி., படித்த நான் முறைப்படி டாட்டூ வரைய கற்றேன். 5 ஆண்டுகளாக டாட்டூ கலைஞராக இருக்கிறேன். இன்றைய இளைஞர்கள், பெண்கள் விதவிதமாக டாட்டூ வரைவதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களின் உடலின் தன்மை, ஆரோக்கியம், அலர்ஜி குறித்து நான் கொடுக்கும் கவுன்சிலிங்கைகேட்ட பின் தான் வரைய ஆரம்பிப்பேன்.18 வயதிற்கு கீழே 50 வயதுக்கு மேலே, சர்க்கரை, தோல் நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகளுக்கு வரைவதில்லை.

இயல்பாக காயம் ஏற்பட்டால் சரியாக எத்தனை நாட்கள் ஆகும் என்றும் கேட்டு விடுவேன். சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் உதடுகளை சிவப்பாக்க, புருவங்களை அடர்த்தியாக்க டாட்டூ வரைகிறார்கள். இறந்தவர்களின் சாம்பலை கூட டாட்டூ கலரில் சேர்த்து வரைகிறார்கள். இதை நான் எப்போதும் ஊக்குவிப்பதில்லை.உறவினர்களாக இருந்தாலும் ஒவ்வொரு நபருக்கும் தனியாக புதிய ஊசி எடுத்து வரைகிறேன். நம் தோலின் 7 அடுக்கில் 2 அடுக்கு வரை மட்டுமே ஊசி செலுத்தி வரைகிறேன். வரைந்த பின் ஊசிகள், இன்க் கப்புகளை காலி பாட்டிலில் போட்டு, செல்யூசன் ஸ்பிரே செய்து டிஸ்போஸ் செய்வேன். வரைந்த பின் செட் ஆக 20 நாட்கள்ஆகும்.

ஊசி குத்தியதால் சிறு காயம் ஏற்பட்டு மறையும். நிரந்தரம், தற்காலிகம் என விரும்பிய படங்கள், பெயர்கள், போட்டோக்களை பிளாக் அண்ட் ஒயிட், கலரில் வரையலாம்.'கவர் அப்' முறை டாட்டூவில் தழும்புகளை கூட மறைத்துவிடலாம். இப்படி முறையாக வரைந்தால் டாட்டூவால் ஆரோக்கியம் பாதிக்காது. அதனால் தான் லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் விழிப்புணர்வுடன் டாட்டூ வரைவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X