இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணம் அந்தந்த ஆண்டில் வழங்க தனியார் பள்ளிகள் கோரிக்கை

Added : செப் 18, 2022 | |
Advertisement
ஈரோடு: 'அரசின், 25 சதவீத (ஆர்.டி.இ.,) இட ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும், மாணவர்களின் கல்வி கட்டணங்களை, தாமதமின்றி அந்தந்த கல்வியாண்டுக்குள் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு தனியார் பள்ளி மற்றும் கல்லுாரி சங்க கூட்டமைப்பு, கேட்டு கொண்டுள்ளது.தமிழ்நாடு தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகள் சங்க கூட்டமைப்பின், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும்


ஈரோடு: 'அரசின், 25 சதவீத (ஆர்.டி.இ.,) இட ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும், மாணவர்களின் கல்வி கட்டணங்களை, தாமதமின்றி அந்தந்த கல்வியாண்டுக்குள் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு தனியார் பள்ளி மற்றும் கல்லுாரி சங்க கூட்டமைப்பு, கேட்டு கொண்டுள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகள் சங்க கூட்டமைப்பின், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தாளாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. தலைவர் ராஜா தலைமை வகித்தார். செயலர் இளங்கோவன், பொருளாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் சரஸ்வதி, ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி., சின்ராஜ் பங்கேற்றனர்.
கள்ளகுறிச்சி தனியார் பள்ளி யில் பிளஸ் 2 மாணவி தற்கொலையால் வன்முறை ஏற்பட்டது. அரசு விசாரணை நடப்பதால், பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனால் அப்பள்ளி மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, நேரடி வகுப்புகளை துவங்கவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, பள்ளி நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கவும் ஆவன செய்ய வேண்டும்.
தனியார் பள்ளி, பள்ளிகளின் உடமைகளின் பாதுகாப்பு குறித்து உரிய அரசாணை தமிழக அரசால் வெளியிட வேண்டும். பள்ளியின் தொடர் அங்கீகார ஆணை, நகர் ஊரமைப்பு துறை அனுமதி பெறாத பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுக்கும், 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளி களுக்கு, நிரந்தர அங்கீகாரமும் வழங்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதி கல்வி நிறுவன கட்டடங்களுக்கு, 75 சதவீதம் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைந்தபட்சமாக நிர்ணயிக்க முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும்.
தனியார் பள்ளி கட்டண நிர்ணயம் குழுவில் தாளாளர் களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். நகர் ஊரமைப்பு துறையின் திட்டமில்லா பகுதிகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், வரைமுறைப்
படுத்த அனுமதி கோரி விண்ணப்பித்த கல்வி நிறுவனங்களுக்கு விரைவாக அனுமதி வழங்குவது குறித்து மற்றும் திட்டமுள்ள பகுதிகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள் வரைமுறைபடுத்த புது அரசாணை வெளியிட வேண்டும்.
அரசின், 25 சதவீத (ஆர்.டி.இ.,) இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை கட்டணங்களை, எவ்வித தாமதமுமின்றி அந்தந்த கல்வி ஆண்டுக்குள் உடனுக்குடன் வழங்கவும், குறைந்தபட்ச, 50 சதவீத கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். புதிய பாட திட்டங்களுக்கான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு வழங்கப்படுவது போல், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X