அண்ணாமலை புள்ளி விபரங்களுடன் கேட்டால் பதிலளிக்க தயார்: அமைச்சர் பொன்முடி

Added : செப் 18, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஓமலுார்: 'திராவிட மாடல்' குறித்து, அண்ணாமலை புள்ளி விபரங்களுடன் கேட்டால், பதிலளிக்க தயாராக உள்ளேன் என, சேலம், பெரியார் பல் கலையில் நடந்த, ஈ.வெ.ரா., பிறந்தநாள் விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.இதுகுறித்து, நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி: சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை போதிப்பது தான், 'திராவிட மாடல்' ஆட்சி என, முதல்வர் ஸ்டாலின் தெளிவாக


ஓமலுார்: 'திராவிட மாடல்' குறித்து, அண்ணாமலை புள்ளி விபரங்களுடன் கேட்டால், பதிலளிக்க தயாராக உள்ளேன் என, சேலம், பெரியார் பல் கலையில் நடந்த, ஈ.வெ.ரா., பிறந்தநாள் விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இதுகுறித்து, நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி: சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை போதிப்பது தான், 'திராவிட மாடல்' ஆட்சி என, முதல்வர் ஸ்டாலின் தெளிவாக அறிவித்துள்ளார். அதன்படி, அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவநாளாகவும், ஈ.வெ.ரா., பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்துள்ளார். அண்ணா துரை, ஈ.வெ.ரா., கருணாநிதி ஆகியோரின் நுால்களை படித்தால், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அரசியல், சமுதாயம், சமூக நீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படும் என்பதால் தான், சபாநாயகர் அப்பாவு இவைகளை, 'பாடத்திட்டங்களாக உருவாக்க வேண்டும்' என, தெரிவித்தார். அதற்கான நட
வடிக்கைகள் வரும் கல்வியாண்டிலேயே எடுக்கப்படும்.
'மெல்போர்ன்' போன்ற வெளிநாட்டு பல்கலையுடன், கல்வி ஒப்பந்தம் போடும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் வெளிநாடு
பல் கலைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். தமிழகத்துக்கு என, ஒரு கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 'திராவிட மாடல்' ஆட்சி நடைபெறவில்லை என, அண்ணாமலை குற்றம் சாட்டு கிறார். இந்த கேள்விக்கு, 1919-20ல், கல்வி நிலையங்கள், சட்டசபையில் எவ்வளவு பேர் பணிபுரிந்தனர் என்ற புள்ளி
விபரங்களோடு, அண்ணாமலை கேட்டால், நான் அதற்கு பதிலளிக்க தயாராக உள்ளேன். அவர் மிரட்டியே பழக்கப்பட்டவர்; அவர் நிறைய படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பேட்டியின் போது சபாநாயகர் அப்பாவு, சேலம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-செப்-202212:18:33 IST Report Abuse
அநாமதேயம் புள்ளி விவரங்கள் அரசாங்கத்திடம் தான் இருக்கும். நீங்கள் வந்து என்ன செய்தீர்கள் என்று சொல்ல முடியாமல் அண்ணாமலை அவர்கள் புள்ளி விபரங்கள் தரவேண்டும் என்றால் என்ன அர்த்தம். உங்களிடம் ஒன்றும் இல்லை என்று தான். வாய்பேச்சுத்தான் சீனி சக்கரை சித்தப்பா என்று சோ சொன்ன உங்கள் தலைவர் பேச்சு தான் ஞாபகம் வருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X