தினமும் காலை தேசிய கீதம் பாடும் மஹா., கிராம மக்கள்

Updated : செப் 19, 2022 | Added : செப் 18, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மும்பை: மாவோயிஸ்ட் பாதிப்பு என்ற அடையாளத்தை மாற்றுவதற்காக மஹாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள முல்சேரா கிராம மக்கள் தினமும் காலை தேசிய கீதம் பாடி வருகின்றனர்.மும்பையில் இருந்து 900 கி.மீ., தொலைவில் இந்த முல்சேரா கிராமத்தில் சுமார் 2,500 பேர் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடியினர் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவர்கள். இது ஒரு
national anthem, Mulchera, maharastra, people, village, தேசிய கீதம், மஹா., கிராம மக்கள்,

மும்பை: மாவோயிஸ்ட் பாதிப்பு என்ற அடையாளத்தை மாற்றுவதற்காக மஹாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள முல்சேரா கிராம மக்கள் தினமும் காலை தேசிய கீதம் பாடி வருகின்றனர்.

மும்பையில் இருந்து 900 கி.மீ., தொலைவில் இந்த முல்சேரா கிராமத்தில் சுமார் 2,500 பேர் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடியினர் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவர்கள். இது ஒரு காலத்தில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதியாக இருந்தது. கடந்த 1992ல் சந்தோஷ் அன்னா என்ற மாவோயிஸ்ட் கமாண்டர், போலீசாருடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், போலீசாருடன் நடந்த மோதலில் மற்றொரு மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சுட்டு கொல்லப்பட்டார். இதனால் அந்த கிராமத்தில் மாவோயிஸ்ட்களின் அச்சம் இருந்தது. இதனையடுத்து, அதனை மாற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் பாப்கர் என்பவர், மக்களை ஒன்றிணைக்க தினமும் தேசிய கீதம் பாட வைக்கும் திட்டத்தினை செயல்படுத்தினார். இதன்படி முல்சேரா கிராமத்தில் போலீசார் இரண்டு ஒலி பெருக்கிகள் மூலம் தேசபக்தி பாடல்களை ஒலிபரப்பி, தேசிய கீதம் இசைப்பதற்கான நேரம் வந்துவிட்டதை சமீஞ்சைகளாக தெரிவிப்பார்கள்.
இதனையடுத்து காலை 8:45 மணிக்கு, சிறிய மற்றும் பெரிய கடை வைத்திருப்பவர்கள், வணிகர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தேசிய கீதம் பாடுவார்கள். அப்போது, இருசக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களில் செல்வோரும், அதனை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு தேசிய கீதம் பாடுவதில் இணைந்து கொள்வார்கள். அந்த கிராமம் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்படும். அந்த பஸ் டிரைவர், நடத்துநர் மற்றும் அதில் இருக்கும் பயணிகளும் தேசிய கீதம் பாடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது கடந்த ஆக.,15 முதல் வழக்கமாக நடந்து வருகிறது.

இந்த கிராமத்திற்கு அருகில் இருக்கும் விவேகானந்பூரிலும் இதே நடைமுறை தொடர்வதாக போலீசார் தெரிவித்தனர். இதனால், அக்கிராம மக்கள் இடையே புது உத்வேகம், தேசப்பற்றும் சகோதரத்துவம் அதிகரித்து வருகிறது. குற்றச்செயல்களும் குறைகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



இவ்வாறு மஹாராஷ்டிராவில் தினமும் தேசிய கீதம் பாடும் கிராமங்களில் இது இரண்டாவதாகும். தேசிய அளவில் 3வது கிராமம் எனவும் பெயர் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார் மஹாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டத்தில் உள்ள பிவாடி கிராமத்திலும், தெலுங்கானாவின் நல்கொண்டா கிராமத்திலும் தினமும் மக்கள் தேசிய கீதம் பாடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-செப்-202216:00:35 IST Report Abuse
Natarajan Ramanathan ஆந்திராவிலும் இப்படி ஒருகிராமம் உண்டு
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
18-செப்-202213:48:55 IST Report Abuse
Barakat Ali திராவிட மாடலுக்கு எதிரா நடந்துக்குறாங்களே ? தப்பாச்சே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X