2024க்குள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் தயார்: அமைச்சர் வேலு

Updated : செப் 18, 2022 | Added : செப் 18, 2022 | |
Advertisement
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் வயித்துமலை அடிவாரத்தில் அமைச்சர் வேலு ஆய்வு செய்தனர்.இது குறித்து,அமைச்சர் வேலு செய்தியாளருக்கு அளித்த பேட்டி: தென்னகத்தின் வீர விளையாட்டு, மக்களால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு ஜல்லிக்கட்டு. தென்னக மக்களின் மனநிறைவடையும் வகையில், அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்து விடுவோம்.
அமைச்சர்வேலு, Alanganallur, Jallikattu, அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டு

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் வயித்துமலை அடிவாரத்தில் அமைச்சர் வேலு ஆய்வு செய்தனர்.
இது குறித்து,அமைச்சர் வேலு செய்தியாளருக்கு அளித்த பேட்டி: தென்னகத்தின் வீர விளையாட்டு, மக்களால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு ஜல்லிக்கட்டு. தென்னக மக்களின் மனநிறைவடையும் வகையில், அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்து விடுவோம். ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் பகுதியின் அருகிலேயே மைதானம் அமைக்க வேண்டும் என கேட்டுகொண்டதன்படி தற்போது இந்த இடத்தை தேர்வு செய்துள்ளோம்.
இங்கு மேய்ச்சல்கால் புறம்போக்கு அரசின் 66 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் முதற்கட்டமாக 16 ஏக்கர் தேவைப்படும் அதனை என்னென்ன அனுமதிகள் தேவையோ அவற்றை எல்லாம் பெற்று பணியை தொடங்கிட, முதல்வர் உத்தரவுப்படி இங்கு வந்துள்ளேன்.
முதல்வர் ஒப்புதல் பெறப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்து, 16 ஏக்கரில் மண் பரிசோதனை செய்து, இடத்தை சமப்படுத்தி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெறும். முதல்வரின் அனுமதியும், நிர்வாக ஒப்புதலும் பெற்று விரைந்து முடிக்கக்கூடிய வகையில் முறையாக ஒப்பந்தம் விடப்படும்.
தொடர்ந்து நாளை முதல் வருவாய்த் துறையினர் அளவீடுகள் செய்து, தொடர்ந்து சீர் செய்யப்பட்டு பணிகள் தொடங்கும். 2024 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்த இடத்தில் கட்டுமான பணிகளை முடிப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இரவு பகல் பார்க்காமல் பணிகள் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X