குப்புறப் படுத்துத் தூங்குவது சரியா?| Dinamalar

குப்புறப் படுத்துத் தூங்குவது சரியா?

Updated : செப் 18, 2022 | Added : செப் 18, 2022 | |
'குப்புறப் படுத்துத் தூங்குபவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்' என வேடிக்கையாகக் கூறுவர். மெத்தைமீது குப்புறப் படுத்து தலையணையை இறுக அணைத்து தூங்குவதில் நம்மில் பலருக்கு அலாதி இஷ்டம் இருக்கும். குறிப்பாக அதிகாலை அரைத் தூக்கத்தில் பெரும்பாலானோர் தங்களை அறியாமல் குப்புறப் படுத்துத் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பர். குப்புறப் படுத்துத் தூங்குவதால்
Sleeping on your stomach, stomach sleep good or bad, குப்புறப் படுத்து தூங்குவது சரியா, தூங்கும் நிலை

'குப்புறப் படுத்துத் தூங்குபவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்' என வேடிக்கையாகக் கூறுவர். மெத்தைமீது குப்புறப் படுத்து தலையணையை இறுக அணைத்து தூங்குவதில் நம்மில் பலருக்கு அலாதி இஷ்டம் இருக்கும். குறிப்பாக அதிகாலை அரைத் தூக்கத்தில் பெரும்பாலானோர் தங்களை அறியாமல் குப்புறப் படுத்துத் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பர். குப்புறப் படுத்துத் தூங்குவதால் உடலுக்கு ஏதாவது பாதிப்பு வருமா எனத் தெரிந்துகொள்வோம்.


latest tamil newsகுப்புறப் படுத்துத் தூங்குவதில் சில நன்மைகளும் உண்டு, சில தீமைகளும் உண்டு. உடற்பருமனான சிலர் மல்லாந்து படுத்துத் தூங்கும்போது குறட்டை உண்டாகும். இதனால் தூக்கம் தடைபடும். நாக்கு உலந்ர்துபோகும். ஆனால் குப்புறப்படுத்து தூங்குபவர்களுக்கு இந்த பிரச்னைகள் கிடையாது. ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் குப்புறப் படுத்துத் தூங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவர்களது எடை மொத்தத்தையும் வயிறும் மார்பும் சுமந்துகொண்டு இருப்பதால் முதுகுத் தண்டுவடம் அழுத்தப்படும். இதனால் குப்புறப் படுத்து தூங்கும் சிலருக்கு எலும்பு சந்திப்புகளில் வலி உண்டாகும்.


latest tamil newsகுப்புறப் படுத்துத் தூங்கும் பலர் தலையணை மீது முகத்தைப் புதைத்துத் தூங்குவதைத் தவிர்க்க தலையை இடது அல்லது வலதுபுறம் திருப்பி வைத்து பல மணி நேரம் உறங்குவர். இவ்வாறு செய்வதால் கழுத்து எலும்பு ஒருபக்கமாக சுழற்றப்படுகிறது. இது நாளடைவில் கழுத்து மற்றும் மேல் முதுகுப் பகுதியின் தண்டுவடத்தை பாதித்து வலியை உண்டாக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X