சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 18, 2022 | |
Advertisement
அறிவியல் ஆயிரம்என்ன வித்தியாசம்இந்தியாவில் சிறுத்தை இனங்கள் ஏற்கனவே உள்ளன. அழிந்து போன சிவிங்கிகளை மீட்டெடுக்க தான் தற்போது ஆப்ரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. சிவிங்கி (சீட்டா), சிறுத்தை (லெப்பர்ட்) இரண்டும் வெவ்வேறானவை. சிறுத்தை புலியைப் போன்றது. உடல் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பெரிய கறுப்புத் திட்டுகள் பரந்து காணப்படும். சிவிங்கி உடல் வெளிறிய பழுப்பு

அறிவியல் ஆயிரம்

என்ன வித்தியாசம்


இந்தியாவில் சிறுத்தை இனங்கள் ஏற்கனவே உள்ளன. அழிந்து போன சிவிங்கிகளை மீட்டெடுக்க தான் தற்போது ஆப்ரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. சிவிங்கி (சீட்டா), சிறுத்தை (லெப்பர்ட்) இரண்டும் வெவ்வேறானவை. சிறுத்தை புலியைப் போன்றது. உடல் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பெரிய கறுப்புத் திட்டுகள் பரந்து காணப்படும். சிவிங்கி உடல் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். அதன் மேல் சிறிய கறுப்புப் புள்ளிகள் இருக்கும். சிறுத்தை மணிக்கு 58 கி.மீ., வேகத்தில் செல்லும். ஆனால் சிவிங்கி மணிக்கு 80 - 130 கி.மீ., வேகத்தில் செல்லும்.

தகவல் சுரங்கம்

உயரத்தில் பறக்காத பறவை


கவுதாரி பறவையின் உயரம் 34 செ.மீ. இதன் எடை 350 கிராம். இதன் உடலில் கருப்பு நிற கோடுகள் இருக்கும். சாதாரண நாட்டுக் கோழியை போன்ற பருத்த உடல் அமைப்பைக் கொண்டவை. குழுக்களாக வசிக்கும். பெரும்பாலும் நிலப்பகுதியிலேயே நடமாடும்.
300 அடி உயரத்திற்கு மேல் பறக்காது. மிக வேகமாக ஓடும் திறன் பெற்றவை. ஆபத்து ஏற்பட்டாலும், மனிதர்களை கண்டாலும் ஓடி ஒளிந்தே தப்ப முயலும். பறக்கும்போது புறாக்களைப் போல படபடவென இறக்கைகள் அடிக்கும் சத்தம் கேட்கும். 6 முதல் 8 முட்டைகள் இட்டு அடைகாக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X