எனது நகரம் எனது குப்பை:விழிப்புணர்வு பேரணி

Added : செப் 18, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:காரமடை நகரில் குப்பையை வீதியில் கொட்டாமல் இருக்க, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 'எனது நகரம் எனது குப்பை' என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.காரமடை நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. மக்கள் குப்பையை வீதிகளிலும், ரோடுகளிலும் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் சேகரமாகும் குப்பையை, மக்கும் மக்காத குப்பை என, தரம் பிரித்து வைத்து,

மேட்டுப்பாளையம்:காரமடை நகரில் குப்பையை வீதியில் கொட்டாமல் இருக்க, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 'எனது நகரம் எனது குப்பை' என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.காரமடை நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. மக்கள் குப்பையை வீதிகளிலும், ரோடுகளிலும் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் சேகரமாகும் குப்பையை, மக்கும் மக்காத குப்பை என, தரம் பிரித்து வைத்து, நகராட்சி துாய்மை பணியாளர்கள் வரும்போது, அவர்களிடம் வழங்க வேண்டும்.இது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காரமடை நகரில், 'எனது நகரம் எனது குப்பை' என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.நகராட்சி அலுவலகம் முன் துவங்கிய இப்பேரணி, துவக்க நிகழ்ச்சிக்கு, நகராட்சி கமிஷனர் பால்ராஜ் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ் பேரணியை துவக்கிவைத்தார். அப்போது பேரணியில் பங்கேற்றவர்கள், உறுதிமொழி எடுத்தனர்.நகராட்சி அலுவலகத்தில் புறப்பட்ட பேரணி, சந்தை வளாகம், தேர் செல்லும் நான்கு வீதிகள் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, மீண்டும் நகராட்சி அலுவலகத்தை அடைந்தது.இப்பேரணியில் நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் காரமடை டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பேரணியில் குப்பையை வீதியில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். தரம் பிரித்து வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் வீரபாகு நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X