நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணி: ஊராட்சி செயலர்கள் இடமாற்றம்

Added : செப் 18, 2022 | |
Advertisement
அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தை சேர்ந்த, ஒன்பது ஊராட்சி செயலர்கள் அதிரடியாக வேறு ஒன்றியங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி செயலர் ரங்கசாமி, மூடுதுறை ஊராட்சிக்கும், காரேகவுண்டன் பாளையம் ஸ்ரீபதி, கொண்டையம்பாளையத்திற்கும், குப்பேபாளையம் கோபால்சாமி, காடுவெட்டி பாளையத்திற்கும், ஒட்டர்பாளையம் அருண்,

அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தை சேர்ந்த, ஒன்பது ஊராட்சி செயலர்கள் அதிரடியாக வேறு ஒன்றியங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி செயலர் ரங்கசாமி, மூடுதுறை ஊராட்சிக்கும், காரேகவுண்டன் பாளையம் ஸ்ரீபதி, கொண்டையம்பாளையத்திற்கும், குப்பேபாளையம் கோபால்சாமி, காடுவெட்டி பாளையத்திற்கும், ஒட்டர்பாளையம் அருண், ஜடையம்பாளையத்திற்கும், அ.மேட்டுப்பாளையம் தங்கவேல், பெள்ளாதிக்கும், கஞ்சப்பள்ளி பழனிச்சாமி, இரும்பறைக்கும், அக்கரை செங்கப்பள்ளி ஆனந்தன், தோலம்பாளையத்திற்கும், பசூர் பாக்கியம், தேக்கம்பட்டிக்கும், குன்னத்துார் சாமிநாதன், சிக்கரசம்பாளையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அன்னுார் ஒன்றியத்தில், 10 ஊராட்சிகளுக்கு வேறு ஒன்றியங்களிலிருந்து செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பணியிட மாற்றம் செய்யபட்டவர்கள் விடுப்பில் செல்லக்கூடாது. மீறி சென்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பதில் நபரை எதிர்பார்க்காமல் புதிய பணியிடத்தில் உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும், என, கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X