இந்திரா உணவகங்களை மூட திட்டம்; பா.ஜ., அரசு மீது சித்து குற்றச்சாட்டு

Added : செப் 18, 2022 | |
Advertisement
பெங்களூரு-இந்திரா உணவகத்தில், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உணவின் தரம் குறைவதும், உணவக நிர்வகிப்புக்கு தேவையான நிதியை அரசு வழங்காததும், முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், ஏழைகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என, பலருக்கும் அனுகூலமாகும் நோக்கில் 'இந்திரா உணவகம்' திட்டம்
இந்திரா உணவகங்களை மூட திட்டம்; பா.ஜ., அரசு மீது சித்து குற்றச்சாட்டு

பெங்களூரு-இந்திரா உணவகத்தில், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

உணவின் தரம் குறைவதும், உணவக நிர்வகிப்புக்கு தேவையான நிதியை அரசு வழங்காததும், முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், ஏழைகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என, பலருக்கும் அனுகூலமாகும் நோக்கில் 'இந்திரா உணவகம்' திட்டம் திறக்கப்பட்டது.

முதலில் பெங்களூரில், உணவகங்கள் திறக்கப்பட்டன. அதன்பின் மாநிலம் முழுதும் விஸ்தரிக்கப்பட்டது. உணவகங்கள் பலருக்கும் வரப்பிரசாதமாக இருந்தன. ஐந்து ரூபாய்க்கு, காலை சிற்றுண்டியும், மதியம், இரவு உணவு ஐந்து ரூபாய்க்கும் கிடைத்தது.கர்நாடகாவில், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு கவிழ்ந்து, பா.ஜ., அரசு வந்த போது, இந்திரா உணவகம் மூடப்படும் என, தகவல் வெளியானது. இதற்கு காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் உணவகங்களை மூடும் முயற்சியில் இறங்கவில்லை.கொரோனா நேரத்தில், இந்திரா உணவகம் வாயிலாக, ஏழைகளுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்பட்டது.

தற்போது, பெங்களூரின் அனைத்து இந்திரா உணவகங்களிலும், உணவின் தரம் குறைந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைகிறது. இதற்கு உணவு தரம் குறைந்ததே, காரணம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் நிர்வகிப்புக்கு அரசு நிதியுதவியை குறைத்துள்ளதாக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது.இது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியதாவது:எங்கள் அரசால் துவங்கப்பட்ட இந்திரா உணவகங்களுக்கு, பா.ஜ., அரசு நிதியுதவியை குறைத்துள்ளது.

இதன் மூலம் ஏழைகளின் வயிற்றில் அடிக்க முற்பட்டுள்ளது. உணவகங்களுக்கு, 2017 -- 18ல், 2018 -- 19ல் முறையே, 100 கோடி மற்றும் 150 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய பெங்களூரு மாநகராட்சி, நடப்பாண்டு வெறும் 60 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.உணவு சரியில்லை என, காரணம் காண்பித்து இந்திரா உணவகங்களை மூடுவது, அரசின் எண்ணமாகும். இதற்கு முன், தினமும் 300 முதல் 400 பேர் சாப்பிட வந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை, 50 -- 100 வரை குறைந்துள்ளது. பெங்களூரின் ஏழைகள் அனைவரும் பணக்காரர்கள் ஆகிவிட்டனரா?இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X