மஹாராஷ்டிராவில் அணைகள் திறப்பு: விஜயபுராவின் 7 பாலங்கள் மூழ்கின| Dinamalar

மஹாராஷ்டிராவில் அணைகள் திறப்பு: விஜயபுராவின் 7 பாலங்கள் மூழ்கின

Added : செப் 18, 2022 | |
விஜயபுரா-மஹாராஷ்டிராவின் உஜ்ஜயினி மற்றும் வீர் அணையிலிருந்து, பீமா ஆற்றுக்கு பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகாவின் விஜயபுராவில் உள்ள ஏழு பாலங்கள் நீரில் மூழ்கின.மஹாராஷ்டிராவில், சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கொய்னா உட்பட பல அணைகள் நிரம்பியுள்ளன. இங்கிருந்து பெருமளவில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.உஜ்ஜயினி, வீர் அணைகளில்

விஜயபுரா-மஹாராஷ்டிராவின் உஜ்ஜயினி மற்றும் வீர் அணையிலிருந்து, பீமா ஆற்றுக்கு பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.



இதனால், கர்நாடகாவின் விஜயபுராவில் உள்ள ஏழு பாலங்கள் நீரில் மூழ்கின.மஹாராஷ்டிராவில், சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கொய்னா உட்பட பல அணைகள் நிரம்பியுள்ளன. இங்கிருந்து பெருமளவில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.உஜ்ஜயினி, வீர் அணைகளில் இருந்து, ஒரு லட்சத்து 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால், கர்நாடகாவின் விஜயபுராவின், சடசனா, இன்டி, அலமேலா தாலுகாக்களில் வெள்ளப்பெருக்கு பீதி ஏற்பட்டுள்ளது.



ஏழு பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.பீமா ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. கோவிந்தபுரா -- பன்டார கவடே, உமராணி -- லவங்கி, அவுஜா -- சிரனாளா, ஹிங்கானி -- ஆளகி, கானாபுரா -- படனுரா, ஹிள்ளா -- குப்பேவாடா, சனேகாவ் -- பிரூர் பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் விளைவாக, பல பாதைகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.ஆற்றங்கரையில் வசிப்பவர்களை, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X