குமாரமங்கலம் பள்ளி வாயிலில் மாட்டு கொட்டகை| Dinamalar

குமாரமங்கலம் பள்ளி வாயிலில் மாட்டு கொட்டகை

Added : செப் 18, 2022 | |
பள்ளிப்பட்டு--பள்ளிப்பட்டு ஒன்றியம், கரிம்பேடு ஊராட்சிக்கு உட்பட்டது குமாரமங்கலம் கிராமம். இந்த கிராமம், நகரி, பள்ளிப்பட்டு சாலையில், தமிழக எல்லையில் அமைந்துள்ளது.கிராமத்தின் கிழக்கு பகுதியில் நெடுஞ்சாலையோரம் அரசு துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 95 மாணவர்கள் படித்து வருகின்றனர்.பள்ளியின் நுழைவாயில் பகுதியில், சாலையை ஒட்டி, மாட்டு கொட்டகை
குமாரமங்கலம் பள்ளி வாயிலில் மாட்டு கொட்டகை



பள்ளிப்பட்டு--பள்ளிப்பட்டு ஒன்றியம், கரிம்பேடு ஊராட்சிக்கு உட்பட்டது குமாரமங்கலம் கிராமம். இந்த கிராமம், நகரி, பள்ளிப்பட்டு சாலையில், தமிழக எல்லையில் அமைந்துள்ளது.



கிராமத்தின் கிழக்கு பகுதியில் நெடுஞ்சாலையோரம் அரசு துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 95 மாணவர்கள் படித்து வருகின்றனர்.பள்ளியின் நுழைவாயில் பகுதியில், சாலையை ஒட்டி, மாட்டு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி கட்டடம் பொலிவிழந்து காணப்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களின் கவனம் சிதறவும் வாய்ப்புள்ளது.நெடுஞ்சாலையை கடந்து வீட்டிற்கு செல்லும் மாணவர்கள், சாலையை கவனித்து கடக்கவும் இந்த கொட்டகை தடையாக உள்ளது. மாணவர்களின் நலன் கருதி, மாட்டு கொட்டகையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X