கொரோனா சிறப்பு முகாம்; 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

Added : செப் 18, 2022 | |
Advertisement
திருவள்ளூர்-திருவள்ளூர் அடுத்த, கடம்பத்துார் ஒன்றியம், மணவாள நகர் பகுதியில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 37வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.அப்போது, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட துணை இயக்குனர் ஜவஹர்லால் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.பின் கலெக்டர் கூறியதாவது:மாவட்டத்தில், 37வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், 350



திருவள்ளூர்-திருவள்ளூர் அடுத்த, கடம்பத்துார் ஒன்றியம், மணவாள நகர் பகுதியில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 37வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.அப்போது, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட துணை இயக்குனர் ஜவஹர்லால் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.பின் கலெக்டர் கூறியதாவது:மாவட்டத்தில், 37வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், 350 மையங்களில், 1,400 பணியாளர்கள் மூலம், 40 ஆயிரம் பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதுவரை, மாவட்டத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட தகுதி வாய்ந்தவர்களில், 18 லட்சத்து 88 ஆயிரத்தி 400 பேருக்கு கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களில் செலுத்தப்பட்டு உள்ளது.தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், சிறு தொழில் கூடங்கள், உணவகங்கள் மற்றும் தொழில்நுட்ப கூடங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.தகுதி வாய்ந்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது, கடம்பத்துார் வட்டார மருத்துவ அலுவலர் காந்திமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், சந்திரசேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X