மனைவிக்கு கொலை மிரட்டல் 'பாசக்கார' கணவர் கைது

Added : செப் 18, 2022 | |
Advertisement
பள்ளிப்பட்டு-பள்ளிப்பட்டு, நகரி சாலையைச் சேர்ந்தவர் நடராஜன் மகள் செப்பிய ஜெனீபர், 30. இவருக்கும், ஈச்சம்பாடி காலனியைச் சேர்ந்த முனுசாமி மகன் இளையராஜா, 37, என்பவருக்கும் திருமணம் நடந்து, ஒரு மகன், ஒரு மகள் என, இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவர், மனைவிக்கும் இடையே ஏற்படுத்த குடும்ப தகராறு காரணமாக, ஐந்து மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.செப்பியஜெனீபர், தாய் வீட்டில்



பள்ளிப்பட்டு-பள்ளிப்பட்டு, நகரி சாலையைச் சேர்ந்தவர் நடராஜன் மகள் செப்பிய ஜெனீபர், 30. இவருக்கும், ஈச்சம்பாடி காலனியைச் சேர்ந்த முனுசாமி மகன் இளையராஜா, 37, என்பவருக்கும் திருமணம் நடந்து, ஒரு மகன், ஒரு மகள் என, இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கணவர், மனைவிக்கும் இடையே ஏற்படுத்த குடும்ப தகராறு காரணமாக, ஐந்து மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.செப்பியஜெனீபர், தாய் வீட்டில் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். நேற்று முன்தினம் ஜெனீபர், மகளை பள்ளிப்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விட்டுவிட்டு, முருகன் தியேட்டர் கூட்டுச்சாலையில் நின்றிருந்தார்.அப்போது அங்கு வந்த கணவர் இளையராஜா, மனைவியை தாக்கியும், என்னுடன் வாழ மறுத்தால் உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்.இது குறித்து ஜெனீபர் அளித்த புகாரையடுத்து, பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து இளையராஜாவை கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X