மளிகை வியாபாரியிடம் பொன்னேரியில் வழிப்பறி| Dinamalar

மளிகை வியாபாரியிடம் பொன்னேரியில் வழிப்பறி

Added : செப் 18, 2022 | |
பொன்னேரி--பெரம்பூர், பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் கண்ணன், 34. இவர், ரவை, மைதா பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.நேற்று முன்தினம், பெரம்பூரில் இருந்து புறப்பட்டவர், செங்குன்றம், சோழவரம், காரனோடை ஆகிய பகுதிகளில் விற்பனை முடித்துவிட்டு, வசூல் பணத்துடன் பொன்னேரி வந்தார்.பொன்னேரி, தாயுமான் செட்டி தெருவில் மளிகை கடையில், பொருட்களை சப்ளை செய்து



பொன்னேரி--பெரம்பூர், பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் கண்ணன், 34. இவர், ரவை, மைதா பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.நேற்று முன்தினம், பெரம்பூரில் இருந்து புறப்பட்டவர், செங்குன்றம், சோழவரம், காரனோடை ஆகிய பகுதிகளில் விற்பனை முடித்துவிட்டு, வசூல் பணத்துடன் பொன்னேரி வந்தார்.பொன்னேரி, தாயுமான் செட்டி தெருவில் மளிகை கடையில், பொருட்களை சப்ளை செய்து கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், கண்ணன் வைத்திருந்த, 40 ஆயிரம் ரூபாய் வசூல் பணத்தை பறித்து சென்றனர்.இது குறித்து கண்ணன், பொன்னேரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X