சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

தொடர் முயற்சி நிச்சயமாக கைகொடுக்கும்!

Updated : செப் 20, 2022 | Added : செப் 18, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா: 2011ல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தேன். அடுத்த வருடம் திருமணம். காலையில் இருந்து மாலை வரை பார்க்கும், ஐ.டி., நிறுவன பணிகளில் எனக்கு விருப்பமில்லை. சிறு வயதில் இருந்தே, 'எம்ப்ராய்டரி, டிசைனிங்' எல்லாம் பிடிக்கும். என் வேலையானது, எனக்கு பிடித்த விஷயங்களை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 'பிசினஸ்' துவங் கணும்ங்கிற
சொல்கிறார்கள்

சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா: 2011ல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தேன். அடுத்த வருடம் திருமணம். காலையில் இருந்து மாலை வரை பார்க்கும், ஐ.டி., நிறுவன பணிகளில் எனக்கு விருப்பமில்லை.

சிறு வயதில் இருந்தே, 'எம்ப்ராய்டரி, டிசைனிங்' எல்லாம் பிடிக்கும். என் வேலையானது, எனக்கு பிடித்த விஷயங்களை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 'பிசினஸ்' துவங் கணும்ங்கிற ஆசையை, என் கணவரிடம் சொன்னேன்.
'நான் உனக்கு, 5,000 ரூபாய் தருகிறேன். அதை வைத்து பிசினசை துவங்கு... அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனாலும் சரி, 'பெயிலியரானாலும்' பிரச்னை இல்லை' என்று சொன்னார். 500 ரூபாய்க்கு 'மெட்டீரியல்' வாங்கி, 'பேஸ்புக்' சமூக வலைதளம் வாயிலாக, ௭00 ரூபாய்க்கு விற்றேன். அதை மறுபடியும், பிசினசில் முதலீடு செய்தேன்.
பல இடங்களில் செயற்கை கருவிகளை பயன்படுத்தி நெசவு நெய்கின்றனர். கைத்தறி நெசவு செய்யும் குடும்பங்களை நேரில் போய் பார்த்த போது, அந்த குடும்பத்தினர் கைத்தறி நெசவை மட்டுமே நம்பி இருப்பது தெரிய வந்தது. அவங்களை ஆதரிக்கணும்ங்கிற எண்ணத்தில், கைத்தறி சேலைகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என, முடிவெடுத்தேன்.
'பாரிஜாத் கலெக் ஷன்ஸ்'னு, 2012ல் எங்க 'பிராண்டை' உருவாக்கினோம். காஞ்சிபுரம், கர்நாடகா, ஆந்திரா, விசாகபட்டினம் போன்ற பல பகுதிகளில் உள்ள நெசவாளர்களையும் நேரில் சந்தித்து, கைத்தறி சேலைகளை வாங்கிட்டு வந்தோம். சேலைகளை விற்பனை செய்வதற்கு முன், அவற்றை படங்கள் எடுப்பதற்காகவே, 'போட்டோகிராபி' கற்றேன்.
அது மட்டுமல்ல, 'ஆன்லைன்' வியாபார நுணுக்கங்களையும் கற்றேன். இன்று எங்களுக்கு சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா, பிரிட்டன் என்று, உலகம் முழுக்க வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.எடுத்ததும் லாபத்தை எதிர்பார்க்கக் கூடாது. வாடிக்கையாளர்களை சம்பாதிக்கிறது தான் முக்கியம்.
அதை விட முக்கியம், அவங்க நம்பிக்கையை சம்பாதிக்கிறது. நாம் செய்கிற பிசினஸ் சம்பந்தமாக, வேற சில திறமைகளையும், நுணுக்கங்களையும் கற்று வைத்துக் கொள்வதும் மிக அவசியம். தொடர் முயற்சியும், பொறுமையான அணுகுமுறையும் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்; எனக்கு கைகொடுத்த மாதிரி!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
19-செப்-202221:30:46 IST Report Abuse
NicoleThomson வளர்க மென்மேலும்
Rate this:
Cancel
JayaSeeli - madurai,இந்தியா
19-செப்-202211:33:51 IST Report Abuse
JayaSeeli Well done, sister
Rate this:
Cancel
Sutha - Chennai,இந்தியா
19-செப்-202208:12:44 IST Report Abuse
Sutha வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X