ஆழ்வார்பேட்டையில் 'கொலு பொம்மை' கண்காட்சி

Added : செப் 18, 2022 | |
Advertisement
சென்னை:ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில், நவராத்திரி விழா பண்டிகையை முன்னிட்டு, கொலு பொம்மை கண்காட்சி துவங்கிஉள்ளது.தேசிய அளவிலான கைவினைஞர்கள் உற்பத்தியை லாபநோக்கின்றி சந்தைப்படுத்தும் தன்னார்வ அமைப்பான 'ஷன்மதி கிரியேஷன்ஸ்' சார்பில், கண்காட்சிகளை தொடர்ந்து நடக்கிறது.அந்தவகையில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, கொலு பொம்மை கண்காட்சி துவக்கியுள்ளது. இதில்,
ஆழ்வார்பேட்டையில் 'கொலு பொம்மை' கண்காட்சி

சென்னை:ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில், நவராத்திரி விழா பண்டிகையை முன்னிட்டு, கொலு பொம்மை கண்காட்சி துவங்கிஉள்ளது.
தேசிய அளவிலான கைவினைஞர்கள் உற்பத்தியை லாபநோக்கின்றி சந்தைப்படுத்தும் தன்னார்வ அமைப்பான 'ஷன்மதி கிரியேஷன்ஸ்' சார்பில், கண்காட்சிகளை தொடர்ந்து நடக்கிறது.அந்தவகையில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, கொலு பொம்மை கண்காட்சி துவக்கியுள்ளது. இதில், வாரணாசி பொம்மைகள், கோல்கட்டா களிமண் பொம்மைகள் எட்டிக்கோப்பா, சென்னபட்டனா பொம்மைகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.
குறைந்தபட்சம், 100 ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் வரையிலான பொம்மைகள் உள்ளன. மேலும், கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள், செப்பு சிலைகள், தஞ்சை, பட்டசித்ரா ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.ஆன்மிகப் பொருட்களுக்கு தனி பிரிவு:கண்காட்சியில் ஆன்மிகப் பொருட்களான, ஒன்று முதல், 21 முகம் கொண்ட நேபாள ருத்திராக்ஷம், ஸ்படிக மாலைகள், விக்ரஹங்கள், கோமதி சக்கரம், ரத்தினக் கற்கள், சாளக்கிராமம், பாணலிங்கம், ரத்தின விநாயகர், சிவலிங்கம் உள்ளிட்டவை ஆன்மிகவாதிகளையும், பெண்களையும் கவர்ந்து வருகின்றன.
வரும், 30ம் தேதி வரை நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு, தினசரி காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X