சதுரங்க குத்துச்சண்டை மாணவருக்கு 'கோல்டு'

Added : செப் 19, 2022 | |
Advertisement
வேப்பம்பட்டு:குஜராத் மாநிலம், ஆமதாபாத் ஷாயிபாக் பகுதியில், 11வது தேசிய சதுரங்க குத்துச்சண்டை போட்டி, கடந்த 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்தது.தமிழகம் உட்பட 15 மாநிலங்கள் பங்கேற்ற இப்போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் பங்கேற்றனர். இதில், தலா ஆறு பேர் தங்கம், வெள்ளி, வெண்கலம் என, மொத்தம் 18 பதக்கங்களை வென்றனர்.இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஒரு தங்கம்,
சதுரங்க குத்துச்சண்டை மாணவருக்கு 'கோல்டு'

வேப்பம்பட்டு:குஜராத் மாநிலம், ஆமதாபாத் ஷாயிபாக் பகுதியில், 11வது தேசிய சதுரங்க குத்துச்சண்டை போட்டி, கடந்த 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்தது.
தமிழகம் உட்பட 15 மாநிலங்கள் பங்கேற்ற இப்போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் பங்கேற்றனர். இதில், தலா ஆறு பேர் தங்கம், வெள்ளி, வெண்கலம் என, மொத்தம் 18 பதக்கங்களை வென்றனர்.இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என, நான்கு பதக்கங்களை வென்றனர்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவரும், தனியார் கல்லுாரியில் பிசியோதெரபி படிக்கும் மாணவரான அவினாஷ் ராஜ்குமார், 20, என்பவர், தேசிய சதுரங்க குத்துச்சண்டை போட்டியில், 50 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.இவருக்கு, தேசிய சதுரங்க குத்துச்சண்டை தலைவர் மோட்டுதாஸ் பதக்கம் மற்றும் பரிசு வழங்கி கவுரவித்தார்.
தங்கப் பதக்கம் வென்ற மாணவரையும், அவரை வழிநடத்திச் சென்ற தமிழ்நாடு செயலர் பயாஸ் அகமது, திருவள்ளூர் மாவட்ட சதுரங்க குத்துச்சண்டை மாவட்ட செயலர் பீஸ்மன், பயிற்சியாளர் தாமரைச் செல்வன் ஆகியோரை, பொதுமக்கள் பாராட்டினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X