மாநில ஹாக்கி போட்டி:ஊட்டி அணி வெற்றி| Dinamalar

மாநில ஹாக்கி போட்டி:ஊட்டி அணி வெற்றி

Added : செப் 19, 2022 | |
ஊட்டி:தமிழகம், பாண்டிச்சேரி அளவிலான மாநில ஹாக்கி போட்டியில், ஊட்டி கிரசன்ட் பள்ளி வெற்றி பெற்றது.ஐ.சி.எஸ்.சி., கவுன்சில் (டில்லி) சார்பில், ஊட்டியில் நடந்த போட்டியில், 14 வயதினருக்கான பிரிவில் கிரசன்ட்கேஷில் பப்ளிக் பள்ளி, பிருந்தாவன் பள்ளிக்கு எதிராக விளையாடி, 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 17 வயதினருக்கான பிரிவில், பிருந்தாவன் பள்ளிக்கு எதிராக விளையாடி, 1-0 என்ற கோல்
மாநில ஹாக்கி போட்டி:ஊட்டி அணி வெற்றி

ஊட்டி:தமிழகம், பாண்டிச்சேரி அளவிலான மாநில ஹாக்கி போட்டியில், ஊட்டி கிரசன்ட் பள்ளி வெற்றி பெற்றது.ஐ.சி.எஸ்.சி., கவுன்சில் (டில்லி) சார்பில், ஊட்டியில் நடந்த போட்டியில், 14 வயதினருக்கான பிரிவில் கிரசன்ட்கேஷில் பப்ளிக் பள்ளி, பிருந்தாவன் பள்ளிக்கு எதிராக விளையாடி, 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 17 வயதினருக்கான பிரிவில், பிருந்தாவன் பள்ளிக்கு எதிராக விளையாடி, 1-0 என்ற கோல் கணக்கில் இரண்டாவது இடத்தை பிடித்தது. 19 வயதினருக்கான பிரிவில், குன்னுார் ஹோலி இன்னசென்ட் பள்ளியுடன் விளையாடி, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பயிற்சியாளர் கோபி மற்றும் மூன்று அணிகளின் வீரர்களுக்கு, பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் உமர் பாரூக் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X