பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு

Added : செப் 19, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி,:புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.புரட்டாசி மாதம், அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாளை, பக்தர்கள் வழிபடுவது வழக்கம். புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில், பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.நேற்று புரட்டாசி மாதம்
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி,:புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.புரட்டாசி மாதம், அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாளை, பக்தர்கள் வழிபடுவது வழக்கம். புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில், பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.நேற்று புரட்டாசி மாதம் துவங்கியதையடுத்து, கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்தனர். பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜப் பெருமாளுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சுதர்சன ஹோமம் நடைபெற்றது. புரட்டாசி மாத மகா உற்சவத்தை முன்னிட்டு, தாயாருடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட, ஒன்பது வகை அபிஷேகம் நடந்தது. துளசி, அரளி, செவ்வந்தி, நந்தியாவட்டம் உள்ளிட்ட, ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜை நடந்தது.திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில் விஷ்ணு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவில், அன்சாரி வீதி சிவராம பக்த ஆஞ்சநேயர் கோவில், கிணத்துக்கடவு சொலவம்பாளையம் மஹாலட்சுமி சமேத சாத்துார் பெருமாள் கோவில், உடுமலை ரோடு வேணி நகர் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஆனைமலை லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. நா.மூ.சுங்கம், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. கோட்டூர் கரிவரதராஜப்பெருமாள் கோவிலிலும், சிறப்பு பூஜைகள் நடந்தன.


வால்பாறை


வால்பாறை அக்காமலை பாலாஜி கோவிலில், புரட்டாசி மாதம் முதல் நாளான நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும் நடந்தது. தொடர்ந்து காலை, 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் பாலாஜி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், ஐயப்ப சுவாமிக்கு, நேற்று, காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில், காமாட்சியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X