ஆத்தூர் அருகே 6 பேர் பலியான சம்பவம்: விபத்து நடந்தது எப்படி

Updated : செப் 19, 2022 | Added : செப் 19, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
ஆத்துார்-ஆத்துார் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட கோர விபத்தில், பலியானோர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. ஆம்னி மற்றும் லாரி டிரைவர்களின் அலட்சியம்சாலையில் பஸ்சை நிறுத்தி, வலதுபுறம் 'லக்கேஜ்' ஏற்றிய ஆம்னி பஸ் டிரைவர், அதிவேகமாக லாரியை ஓட்டிய டிரைவர் என, இருவரின் அலட்சியத்தால், பேத்தி மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்ற தாத்தா, பாட்டி, தாய்மாமன் பலியாகினர். சேலம் மாவட்டம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆத்துார்-ஆத்துார் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட கோர விபத்தில், பலியானோர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.

ஆம்னி மற்றும் லாரி டிரைவர்களின் அலட்சியம்

சாலையில் பஸ்சை நிறுத்தி, வலதுபுறம் 'லக்கேஜ்' ஏற்றிய ஆம்னி பஸ் டிரைவர், அதிவேகமாக லாரியை ஓட்டிய டிரைவர் என, இருவரின் அலட்சியத்தால், பேத்தி மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்ற தாத்தா, பாட்டி, தாய்மாமன் பலியாகினர்.latest tamil newsசேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, பெத்தநாயக்கன்பாளையம், சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 61; டெய்லரான இவரது மகள் தீபா, சென்னையில் வசிக்கிறார். இவரது, 14 வயது மகளுக்கு, நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கவிருந்தது.


அதிவேகம்


இதில் பங்கேற்க திருநாவுக்கரசு, அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் உட்பட ஐந்து பேர், தனியார் ஆம்னி பஸ்சில் சென்னை செல்ல முன்பதிவு செய்தனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:10 மணிக்கு, பெத்தநாயக்கன்பாளையம் டவுன் பஞ்., அலுவலகம் அருகே சாலையோரம் ஆம்னி பஸ்சை நிறுத்தி, சீர்வரிசை பொருட்களை, பஸ்சின் வலதுபுறம், 'லக்கேஜ்' அறையில் வைத்துக் கொண்டுஇருந்தனர்.அப்போது, 'எம் சாண்ட்' மணல் ஏற்றியபடி, அதிவேகமாக வந்த 'டிப்பர்' லாரி, பஸ்சையும், அதன் வலதுபுறம் பக்கவாட்டில் லக்கேஜ் ஏற்றிக் கொண்டிருந்தவர்களையும் கவனிக்காமல், அவர்கள் மீது மோதியது.


சிகிச்சை


பஸ்சை உரசியபடி லாரி சென்றதில், திருநாவுக்கரசு, 61, அவரது மகன் ரவிகுமார், 41, உறவினரான தலைவாசல் ஆறகளூரைச் சேர்ந்த செந்தில்வேலன், 46. ஆத்துார், கொத்தாம்பாடி சுப்ரமணி, 40, ஆம்னி பஸ் கிளீனர் சேலம், கல்லுப்பட்டி தீபன், 25, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.திருநாவுக்கரசு மனைவி விஜயா, 58, துலுக்கனுார் முருகேசன் மனைவி மாதேஸ்வரி, 57, அவரது மகன் ஜெயபிரகாஷ், 40, படுகாயமடைந்தனர். மூவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


latest tamil news
வழக்கு பதிவு


இதில், விஜயா இறந்தார். மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆம்னி பஸ் டிரைவரான, ஆத்துார், அம்மம்பாளையத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், 50; டிப்பர் லாரி டிரைவரான நாமக்கல், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக், 30, ஆகியோர் மீது, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து ஏத்தாப்பூர் போலீசார் கைது செய்தனர்.சேலம் கலெக்டர் கார்மேகம், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், விபத்து நடந்த இடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கலெக்டர் கார்மேகம் கூறுகையில், ''ஆத்துார் நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகள் குறித்து ஆராய்ந்து, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. சாலை விதிகளை பின்பற்றாததே விபத்துக்கு காரணமாகிறது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-செப்-202212:26:28 IST Report Abuse
Saravanan மணல் லாரியா இல்லை மரண லாரியா
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22-செப்-202205:19:10 IST Report Abuse
NicoleThomson இந்த பகுதியில் இருக்கும் போலீஸ்காரர்களை இன்னமும் எதற்கு வேளையில் வைத்துள்ளீர்கள்?
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
21-செப்-202219:10:32 IST Report Abuse
THINAKAREN KARAMANI எந்த இடத்தில பஸ் லாரிகளை நிறுத்தக்கூடாதோ அங்கெல்லாம் அலட்சியமா நிறுத்தவேண்டியது அப்புறம் ACCIDENT ஆகவேண்டியது. நிறுத்தினவன் ஓட்டினவன் எல்லாம் எந்த சேதமும் இல்லாமல் இருப்பான் இவர்களையெல்லாம் திருத்த முடியாது. பாவம் அநியாயமாக ஆறு உயிர்கள் பலியாகி விட்டது. மனதுக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. . THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X