லூலூ மால் வேண்டவே வேண்டாம்:மளிகை வியாபாரிகள் வேண்டுகோள்

Added : செப் 19, 2022 | |
Advertisement
கோவை;லூலூ மால் அமைக்க அனுமதி அளித்ததை, தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, கோவை மளிகை வியாபாரிகள் சங்க கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவை மளிகை வியாபாரிகள் சங்கத்தின், 66வது மகாசபை கூட்டம், நேற்று நடந்தது. சங்கத்தின் ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வெளியே நடக்கும், அனைத்து
கோவை, லூலூ மால், தமிழக அரசு, Coimbatore, Lulu Mall, TN Govt,

கோவை;லூலூ மால் அமைக்க அனுமதி அளித்ததை, தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, கோவை மளிகை வியாபாரிகள் சங்க கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவை மளிகை வியாபாரிகள் சங்கத்தின், 66வது மகாசபை கூட்டம், நேற்று நடந்தது. சங்கத்தின் ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வெளியே நடக்கும், அனைத்து வணிகத்துக்கும் சந்தை கட்டணம் இல்லை என, தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் துபாயின் லூலூ மாலை கொண்டு வந்தால், பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும். இதனால், லூலூ மால் அமைக்க அனுமதி அளித்ததை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதிக பயணிகள் பயணிக்கும் வழித்தடமான, கோவை- - பெங்களூரு இடையே, ஒரு புதிய இரவு நேர விரைவு ரயிலை இயக்க வேண்டும். கோவை விமானநிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோவையில் பழுதுபட்ட ரோடுகளை செப்பனிட, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வை, உடனே திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க தலைவர் பிரபாகர், இணைத் தலைவர் சந்திரசேகரன், துணைத் தலைவர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X