உயர்த்திய மின் கட்டணத்தை செலுத்த...இப்போது முடியாது! விசைத்தறியாளர் கூட்டமைப்பு அறிவிப்பு

Updated : செப் 19, 2022 | Added : செப் 19, 2022 | |
Advertisement
கோவை:'விசைத்தறிகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை, அரசு மறுபரிசீலனை செய்யும் வரை மின் கட்டணத்தை செலுத்தப்போவதில்லை' என, தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக, ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுக்க ஆறு லட்சம் விசைத்தறிகள் உள்ளன. நாள்
உயர்த்திய மின் கட்டணத்தை செலுத்த...இப்போது முடியாது! விசைத்தறியாளர் கூட்டமைப்பு அறிவிப்பு

கோவை:'விசைத்தறிகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை, அரசு மறுபரிசீலனை செய்யும் வரை மின் கட்டணத்தை செலுத்தப்போவதில்லை' என, தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக, ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுக்க ஆறு லட்சம் விசைத்தறிகள் உள்ளன.

நாள் ஒன்றுக்கு ஐந்து கோடி மீட்டர் துணி உற்பத்தியாகிறது. அதன் மதிப்பு 150 கோடி ரூபாய். இதன் வாயிலாக, ஏழு கோடி ரூபாய் அரசுக்கு ஜி.எஸ்.டி.,யாக செலுத்தப்படுகிறது. இதில் மாநில அரசின் பங்கு மட்டும் 3.75 கோடி ரூபாய். விசைத்தறி மற்றும் அதை சார்ந்த தொழிலில், பத்து லட்சம் பேர் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் ஐந்து பேர் என்றால், மொத்தம் ஒரு கோடி பேர் இத்துறையை சார்ந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு உயர்த்தியுள்ள மின்கட்டணத்தால், இத்துறையினர் ஆடிப்போயுள்ளனர். தொழிலை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இது குறித்து, கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், செயலாளர் வேலுசாமி ஆகியோர் கூறியதாவது: மின்கட்டணம் 31 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி உயர்த்தப்பட்டால், உற்பத்தி செலவு அதிகரிக்கும்; துணி விலை உயரும். துணி விலை உயர்ந்தால், வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் துணிரகங்களை அனுப்ப முடியாது. துணி விலை உயரும் போது, மற்ற பொருட்களின் விலையும் உயரும். மின்சாரம் என்பது அனைத்து தொழிலுக்கும் அடிப்படையானது.
விசைத்தறி தொழிலை பாதுகாக்க, முன்னாள் முதல்வர்கள் சலுகைகளை அறிவித்தனர்.ஆனால் தற்போதைய அரசு, விசைத்தறியை பற்றி சிந்தித்ததாக தெரியவில்லை. அதனால்தான் இத்தொழில் அழியும் அளவுக்கு, மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். விசைத்தறி மற்றும் அதைச்சார்ந்த ஜவுளித்துறை உற்பத்தியை நிறுத்தினால், ஒரு கோடி குடும்பங்கள் தமிழகத்தில் பாதிப்புக்குள்ளாகும்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வரிடம் மின் கட்டண உயர்விலிருந்து விசைத்தறிகளுக்கு விலக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதே சமயம், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என்றும் அறிவித்துள்ளோம்.அரசின் முடிவுக்கு பிறகு, அடுத்த கட்ட போராட்டம் குறித்து பிற அமைப்புகளுடன் பேசி முடிவெடுப்போம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்டது


விசைத்தறிக்கு தமிழ்நாடு மின்வாரியம் 3ஏ2 என்ற வீதப்பட்டியல்(டேரிப்) பயன்படுத்துகிறது. ஒரு யூனிட்டிலிருந்து 750 வரை இலவசம்.751லிருந்து 1,000 வரை 2.30 ரூபாயாக இருந்தது 3:00 ரூபாயாகவும், 1,001லிருந்து 1,500 வரை 3:45 ரூபாயிலிருந்து 4:50 ஆகவும் 1,501லிருந்து எவ்வளவு பயன்படுத்தினாலும் 4.60 லிருந்து 6:00 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மொத்த கணக்கீடு அடிப்படையில் யூனிட் ஒன்றுக்கு, 1:40 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இது, 31 சதவீதமாகும்.

நாளை முதல் உற்பத்தி நிறுத்தம்

மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, விசைத்தறி உற்பத்தியாளர்கள் இன்று மின்துறை அமைச்சரை நேரடியாக சந்திக்கின்றனர், நாளை முதல் விசைத்தறிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இதுகுறித்து, ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சக்திவேல் கூறியதாவது: சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில், 31 சதவீத மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
அதை வலியுறுத்தும் வகையில் நாளை( இன்று) சென்னையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து, கோரிக்கை வைக்க இருக்கிறோம்.செப்.,20(நாளை) முதல் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கிலித்தொடரில் உள்ள சைசிங், சுல்ஜர், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், சொந்த ஜவுளி உற்பத்தி விசைத்தறியாளர்கள், உற்பத்தி நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X