குழியில் விழுந்த காட்டுப்பன்றி மீட்பு

Added : செப் 19, 2022 | |
Advertisement
ஆலாந்துறை:பூலுவபட்டி, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில், கழிப்பறைக்காக, 10 அடி ஆழமுள்ள குழி தோண்டப்பட்டுள்ளது. குழி மூடப்படாமல் திறந்தவெளியில் இருந்துள்ளது. இந்நிலையில், நொய்யல் ஆறு மற்றும் அடர்ந்த புதர் அருகில், குழி இருந்ததால், அவ்வழியாக வந்த, காட்டுப்பன்றி மற்றும் அதன் குட்டி தவறி, குழிக்குள் விழுந்தது. அப்பகுதி மக்கள்,

ஆலாந்துறை:பூலுவபட்டி, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில், கழிப்பறைக்காக, 10 அடி ஆழமுள்ள குழி தோண்டப்பட்டுள்ளது. குழி மூடப்படாமல் திறந்தவெளியில் இருந்துள்ளது. இந்நிலையில், நொய்யல் ஆறு மற்றும் அடர்ந்த புதர் அருகில், குழி இருந்ததால், அவ்வழியாக வந்த, காட்டுப்பன்றி மற்றும் அதன் குட்டி தவறி, குழிக்குள் விழுந்தது. அப்பகுதி மக்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி, காட்டுப்பன்றி மற்றும் அதன் குட்டியையும் பத்திரமாக மீட்டனர். குழியிலிருந்து வெளியே வந்த காட்டுப்பன்றிகள், கண் இமைக்கும் நேரத்திற்குள், அருகில் இருந்த புதருக்குள் தப்பி ஓடின.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X