வங்கிகளில் உள்ளூர் மொழியில் பேச நடவடிக்கை வரவேற்க தகுந்தது: அர்ஜுன் சம்பத்

Updated : செப் 19, 2022 | Added : செப் 19, 2022 | |
Advertisement
சிவகாசி-- ''மத்திய அரசு ஹிந்தியை திணிப்பதாக தமிழகத்தில் சிலர் அரசியல் செய்யும் நிலையில் வங்கிகளில் உள்ளூர் மொழிகளில் பேச மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது,'' என, சிவகாசி விஸ்வநத்தத்தில் ஹிந்து மக்கள் கட்சி மாநில செயற்குழு மற்றும் தாய் மதம் திரும்பும் விழாவில் பங்கேற்ற அதன் தலைவர் அர்ஜுன் சம்பத்
வங்கிகள், உள்ளூர் மொழி பேசுதல், நடவடிக்கை, வரவேற்பு, அர்ஜுன் சம்பத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிவகாசி-- ''மத்திய அரசு ஹிந்தியை திணிப்பதாக தமிழகத்தில் சிலர் அரசியல் செய்யும் நிலையில் வங்கிகளில் உள்ளூர் மொழிகளில் பேச மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது,'' என, சிவகாசி விஸ்வநத்தத்தில் ஹிந்து மக்கள் கட்சி மாநில செயற்குழு மற்றும் தாய் மதம் திரும்பும் விழாவில் பங்கேற்ற அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.


latest tamil news



விழாவில் பிற மதத்திற்கு மாறிய ஏழு பேர் மீண்டும் ஹிந்து மதத்திற்கு மாறினர். அகில பாரத சன்னியாசிகள் பேரவை இணைச்செயலாளர் சுவாமி ராகவேந்திரா மஹராஜ், ஹிந்து மதத்தில் இணையும் சடங்குகளை மேற்கொண்டார்.பின் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: ஆன்மீக நகரமான சிவகாசியிலுள்ள கோயில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்க வேண்டும். சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில்கள் மூலப்பொருள்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

புதிய சட்டங்கள், நிபந்தனைகளாலும் பட்டாசு தொழில் நெருக்கடியை சந்தித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இத்தொழிலை பாதுகாக்க வேண்டும். இப்பகுதியில் மதம் மாற்ற சக்திகள் ஊடுருவியுள்ளதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத மின்தடையால் தொழில்கள் பாதிக்கப்படுவதுடன் மட்டுமின்றி, மாணவர்கள் கல்வியும் தடைபடுகிறது.


மின் கட்டண உயர்வு, மின் தடையை தவிர்க்க வலியுறுத்தி தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சிகளில் வழங்கப்பட்ட இலவச டிவி, மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகிய மின் சாதனங்களை ஒப்படைக்கும் போராட்டம் நடக்கும்.பட்டியல் இன மக்களுக்கு எதிரான நடவடிக்கை, தீண்டாமை இழிவுகள் இன்று வரை தமிழகம் முழுவதும் தொடர்கிறது. முதல்வர் ஸ்டாலின் இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X