சிறுவர் கிரிக்கெட் போட்டி எப்.சி.ஏ., நாமக்கல் வெற்றி

Added : செப் 19, 2022 | |
Advertisement
கோவை:மாநில அளவிலான சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், பியூட்சர் கிரிக்கெட் அகாடமி அணி,16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.எஸ்.கே., கிரிக்கெட் அகாடமி மற்றும் வாசகம் சமூக அறக்கட்டளை சார்பில், 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான அகாடமிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, க.க.சாவடி, ஸ்ரீ நாராயணகுரு கல்லுாரி மற்றும் பண்டிட் நேரு பள்ளி மைதானங்களில் நடக்கிறது. இதில்,
சிறுவர் கிரிக்கெட் போட்டி எப்.சி.ஏ., நாமக்கல் வெற்றி

கோவை:மாநில அளவிலான சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், பியூட்சர் கிரிக்கெட் அகாடமி அணி,16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.எஸ்.கே., கிரிக்கெட் அகாடமி மற்றும் வாசகம் சமூக அறக்கட்டளை சார்பில், 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான அகாடமிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, க.க.சாவடி, ஸ்ரீ நாராயணகுரு கல்லுாரி மற்றும் பண்டிட் நேரு பள்ளி மைதானங்களில் நடக்கிறது. இதில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 12 அணிகள் பங்கேற்று, லீக் முறையில் போட்டியிடுகின்றன.நேற்று முன்தினம் பண்டித நேரு பள்ளியில் நடந்த லீக் போட்டியில், நாமக்கல் பியூட்சர் கிரிக்கெட் அகாடமி மற்றும் கோவைஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணிகள் மோதின.இப்போட்டியில், 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' தேர்வு செய்த பியூட்சர் கிரிக்கெட் அகாடமி அணி, 35.1 ஓவர்களில், 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அணியின் துவக்க வீரர் சக்திவேல் 37 ரன்கள் சேர்த்தார். ஆர்.கே.எஸ்., அணியின் சுப்பையன் மற்றும் ரிதின் அன்பு தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய ஆர்.கே.எஸ்.அணி, 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 16 ரன்கள் வித்தியாசத்தில் பியூட்சர் அணி வெற்றி பெற்றது. ஆர்.கே.எஸ்., அணியின் ஆதித்யா (31), ரித்விக் (36) ரன்கள் சேர்த்தனர். பியூட்சர் அணியின் ரிதம் குமார் நான்கு விக்கெட், சாகில் மூன்று விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X