21ம் நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா உச்சத்தில் இருக்கும்: தர்மேந்திர பிரதான்

Added : செப் 19, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சின்னாளபட்டி : ''21ம் நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா உச்சத்தில் இருக்கும்,'' என திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலையில் நடந்த அரசியல் அறிவியல் துறையின் சுதந்திர போராட்ட தலைவர்கள் புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் பேசினார்.பல்கலை வேந்தர் அண்ணாமலை தலைமை வகித்தார். மத்திய இணை அமைச்சர் முருகன்,
21ம் நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா உச்சத்தில் இருக்கும்: தர்மேந்திர பிரதான்

சின்னாளபட்டி : ''21ம் நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா உச்சத்தில் இருக்கும்,'' என திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலையில் நடந்த அரசியல் அறிவியல் துறையின் சுதந்திர போராட்ட தலைவர்கள் புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் பேசினார்.

பல்கலை வேந்தர் அண்ணாமலை தலைமை வகித்தார். மத்திய இணை அமைச்சர் முருகன், கல்வித்துறை கூடுதல் செயலர் காமினி சவுகான் ரத்தன், பல்கலை மானியக்குழு செயலர் ரஜினிஷ்ஜெயின், பல்கலை துணைவேந்தர் குர்மீத்சிங், பதிவாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் திறந்து வைத்து பேசியதாவது: கிராமம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் எண்ணத்தின்படி இப்பல்கலை உருவானது. இப்பல்கலை மீது பிரதமர் மோடி தனி கவனம் செலுத்துகிறார்.

21ம் நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா உச்சத்தில் இருக்கும். 20-ம் நூற்றாண்டின் மத்திய பகுதி வரை உச்சத்தில் இருந்த ஆங்கிலேயர்கள் சூரியன் மறையாத நாடு என, இங்கிலாந்தை அழைத்தனர். அதனை பின்தள்ளி, இந்தியா பொருளாதாரத்தில் முன்னிலை பெற்றுள்ளது, என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
19-செப்-202212:24:08 IST Report Abuse
venugopal s உங்கள் தலைவர் 2047 வரை வாய்தா வாங்கியுள்ளார்.நீங்கள் 21 ஆம் நூற்றாண்டு என்று கூறினால் 2099 வரையா?
Rate this:
Cancel
19-செப்-202207:03:01 IST Report Abuse
அப்புசாமி பரவாயில்ல. இவரும் அல்வா குடுக்க ஆரம்பிச்சுட்டாரு. 2100 வரைக்கும் ஒரு பய கேள்வி கேக்கபடாது. சொல்லிப்புட்டேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X