போலீஸ் செய்திகள்...| Dinamalar

போலீஸ் செய்திகள்...

Added : செப் 19, 2022 | |
மனநலம் பாதித்தவர் மீட்புமதுரை: மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் மனநலம் பாதித்த இளைஞர் இருந்தார். கலெக்டர் அனீஷ் சேகர் உத்தரவின் பேரில் பஸ் ஸ்டாண்ட் சென்ற செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் ராஜ்குமார், அறிவழகன், செல்லமுத்து அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெகன், விஜயராணி அந்த இளைஞரை மீட்டனர்.தோப்பூர் அரசு மருத்துவமனை காப்பகத்தில் சேர்த்தனர். மது பாட்டில்மனநலம் பாதித்தவர் மீட்புமதுரை: மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் மனநலம் பாதித்த இளைஞர் இருந்தார். கலெக்டர் அனீஷ் சேகர் உத்தரவின் பேரில் பஸ் ஸ்டாண்ட் சென்ற செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் ராஜ்குமார், அறிவழகன், செல்லமுத்து அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெகன், விஜயராணி அந்த இளைஞரை மீட்டனர்.தோப்பூர் அரசு மருத்துவமனை காப்பகத்தில் சேர்த்தனர்.


மது பாட்டில் பறிமுதல்


மேலுார்: அ.வல்லாளபட்டியில் எஸ்.பி., சிவபிரசாத்தின் தனிப்படை போலீசார் ரோந்து சென்ற போது மதுவிற்ற நச்சி, மணிமேகலா உள்ளிட்டோர் தப்பினர். போலீசார் 28 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.990ஐ பறிமுதல் செய்தனர்.


சாலை மறியல்


உசிலம்பட்டி: 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டி-மதுரை ரோட்டில் அனைத்து கள்ளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.


சூதாடியவர்கள் கைது


பேரையூர்: வில்லூர் நாடக மேடையில் சூதாடிய அதே ஊரைச் சேர்ந்த பாலகுரு 44. மணிகண்டன் 31.பாலமுருகன் 36. பட்டவன் 36.பாக்கியம் 65. முத்துக்கருப்பன் 33. ஆகிய ஆறு பேரை போலீசார் கைதுசெய்து விசாரிக்கின்றனர்.


மது விற்றவர் கைது


பேரையூர்: வன்னிவேலம்பட்டி முத்துக்காளை 32. இவர் வீட்டில் சட்டவிரோதமாக மது விற்றார். ரோந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து 37 மது பாட்டில்கள் மற்றும் ரூ.4810ஐ பறிமுதல் செய்தனர்.


கொத்தனார் நீரில் மூழ்கி பலி


அலங்காநல்லுார்: மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் அய்யனார் 37, கொத்தனாரான இவர், நேற்று முன்தினம் தனிச்சியம் உறவினர் வீட்டுக்கு வந்தார். செம்புக்குடிப்பட்டி பெரியாறு கால்வாயில் மூழ்கி இறந்தார். பெரிய ஊர்சேரி அருகே அலங்காநல்லுார் தீயணைப்புத்துறையினர் அய்யனார் உடலை மீட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X