மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம்

Added : செப் 19, 2022 | |
Advertisement
மதுரை : மதுரையில் மறுசீரமைக்கப்பட்ட மாவட்ட, தொடக்க, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மதுரை, மேலுார், உசிலம்பட்டி, திருமங்கலம் என்ற நான்கு கல்வி மாவட்டங்கள் மறுசீரமைப்புக்கு பின் உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்கள்ரத்து செய்யப்பட்டு இரண்டாக குறைக்கப்பட்டன. புதிதாக மதுரை, மேலுார் தொடக்க கல்வி அலுவலகங்கள்

மதுரை : மதுரையில் மறுசீரமைக்கப்பட்ட மாவட்ட, தொடக்க, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை, மேலுார், உசிலம்பட்டி, திருமங்கலம் என்ற நான்கு கல்வி மாவட்டங்கள் மறுசீரமைப்புக்கு பின் உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்கள்ரத்து செய்யப்பட்டு இரண்டாக குறைக்கப்பட்டன. புதிதாக மதுரை, மேலுார் தொடக்க கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மதுரை கல்வி மாவட்ட அலுவலராக பொன்விஜயா, தொடக்க கல்வி அலுவலராக சங்கீதா, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளராக கோகிலா, மேலுார் தொடக்க கல்வி அலுவலராக குமார் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது.பள்ளிகளின் எண்ணிக்கையின் படி 2018ல் அப்போதைய அமைச்சர்உதயகுமார் முயற்சியால் திருமங்கலம் கல்வி மாவட்டம் உதயமானது. தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வை கொண்ட உசிலம்பட்டியும் கல்வி மாவட்டத்தை இழந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X