தொழிலாளர் நலத்துறையினர் திடீர் ஆய்வு

Added : செப் 19, 2022 | |
Advertisement
கோவை:கோவையில் எடையளவு முரண்பாடு உள்ள 91 வர்த்தக வணிக நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, தொழிலாளர் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இது குறித்து, கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்ரி அறிக்கை: கோவையில் சட்டமுறை எடையளவு (பொட்டலப்பொருள்) விதிகள் 2011ன் கீழ், அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில், செப்.,13 முதல் 16 வரை கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை பகுதிகளில்,

கோவை:கோவையில் எடையளவு முரண்பாடு உள்ள 91 வர்த்தக வணிக நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, தொழிலாளர் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இது குறித்து, கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்ரி அறிக்கை: கோவையில் சட்டமுறை எடையளவு (பொட்டலப்பொருள்) விதிகள் 2011ன் கீழ், அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில், செப்.,13 முதல் 16 வரை கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை பகுதிகளில், தொழிலாளர் உதவி ஆய்வர்களால் சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில், பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் பொட்டலமிடுவதற்கான உரிய பதிவுச்சான்று பெறாதது, உரிய அறிவிப்பு இல்லாதது, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.முரன்பாடு கண்டறியப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு, விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு குறைந்த பட்சம் 5,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து தயாரிப்பாளர்கள் இறக்குமதியாளர்கள், பொட்டலமிடுபவர்கள், விற்பனையாளர்கள் பொட்டலமிடுபவரின் முழுமையான முகவரி, பொட்டலப்பொருளின் பெயர், நிகர எடை, தயாரிப்பு மாதம், ஆண்டு, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, நுகர்வோர் தொடர்பு முகவரி ஆகியவை அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.எடையளவு குறைபாடுள்ள 261 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 91 நிறுவனங்களில், முரண்பாடு கண்டறியப்பட்டது. தொழில் வர்த்தக, வணிக நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு, அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X