சிறப்பு முகாம் சிறக்காமல் போனது ஏன்?

Added : செப் 19, 2022 | |
Advertisement
அவிநாசி:'அவிநாசியில் நடந்த இளைஞர் திறன் திருவிழா மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஆகியவை எதிர்பார்த்த பலன் தரவில்லை' என்ற புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் இளைஞர் திறன் திருவிழா, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் மருத்துவ முகாம் ஆகியவை, அவிநாசி அரசு

அவிநாசி:'அவிநாசியில் நடந்த இளைஞர் திறன் திருவிழா மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஆகியவை எதிர்பார்த்த பலன் தரவில்லை' என்ற புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் இளைஞர் திறன் திருவிழா, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் மருத்துவ முகாம் ஆகியவை, அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் அவிநாசி ஒன்றிய பொறுப்பாளர் பழனிசாமி கூறியதாவது;முகாம் சிறப்புற நடக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கருதினார். ஒவ்வொரு அரங்காக வந்து பார்வையிட்டு, பல ஆலோசனைகளை வழங்கினார். ஆனால், ஏற்பாடு சரியாக இல்லாததால், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன.பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, தங்களின் குறைபாடு சார்ந்து, எந்த மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதில் உரிய வழிகாட்டுதல் இல்லை. அவர்களும் இயல்பான மனிதர்கள் போன்றே நடத்தப்பட்டனர்.அவர்களுக்கான கட்டண சலுகை அடிப்படையிலான பஸ், ரயில் டிக்கெட் பதிவுக்கான விண்ணப்ப படிவங்கள் ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு, பலருக்கு வழங்கப்படவில்லை. நுாறு சதவீதம் ஊனத்தால் பாதிக்கப்பட்ட பலர் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத நிலையில், அவர்களையும் நேரில் அழைத்து வந்தால் தான் அவர்களுக்கான சலுகைகளை பெற்றுத்தர முடியும் என, அலுவலர்கள் கூறினர்.இதற்கு மாறாக அலுவலர்களே அவர்களது வீடுகளுக்கு சென்று, அவர்களது ஊனத்தின் தன்மையை அறிந்திருக்கலாம். வேலை வாய்ப்பு முகாமிலும், பங்கேற்ற இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகள் கிடைத்ததாக தெரியவில்லை.இவ்வாறு, அவர் கூறினர்.அவிநாசி பேரூராட்சி கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகள், இளைஞர்களுக்கு பலன் தரும் வகையில் இத்தகைய முகாம் நடத்தப்படுவது, வரவேற்கத்தக்கது. பேரூராட்சி எல்லைக்குள் முகாம் நடந்த போதும், வார்டு கவுன்சிலர்களுக்கு கூட அழைப்பு இல்லை.பேரூராட்சி மன்றத்திற்கு முறையாக அழைப்பு விடுத்திருந்தால், முகாம் பணிகளில் கவுன்சிலர்களும் பங்களிப்பு வழங்கியிருப்பர். முகாம் நடப்பது குறித்து பெரும்பாலானோருக்கு தெரியவில்லை," என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X