நகைகளை வீட்டிலேயே உருக்கிய திருடன்; விசாரணையில் அம்பலம்

Added : செப் 19, 2022 | |
Advertisement
அவிநாசி:அவிநாசி பகுதியில் வீடு புகுந்து நகை, பணம் திருடும் சம்பவங்கள் அதிகரித்தன. குற்றவாளிகளை பிடிக்க, எஸ்.பி.,யின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் சிறப்பு குழுவினரும், அவிநாசி போலீசாரும் இணைந்து, களம் இறங்கினர்.கடந்த 13ம் தேதி, இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக செயல்பட்ட கோவை வெள்ளலுாரை சேர்ந்த ராஜசேகரன், 29, என்பவரை இரு நாட்கள் முன்பு, போலீசார் கைது
நகைகளை வீட்டிலேயே உருக்கிய திருடன்; விசாரணையில் அம்பலம்

அவிநாசி:அவிநாசி பகுதியில் வீடு புகுந்து நகை, பணம் திருடும் சம்பவங்கள் அதிகரித்தன. குற்றவாளிகளை பிடிக்க, எஸ்.பி.,யின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் சிறப்பு குழுவினரும், அவிநாசி போலீசாரும் இணைந்து, களம் இறங்கினர்.கடந்த 13ம் தேதி, இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக செயல்பட்ட கோவை வெள்ளலுாரை சேர்ந்த ராஜசேகரன், 29, என்பவரை இரு நாட்கள் முன்பு, போலீசார் கைது செய்தனர்; 98 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.ராஜசேகரன் மீது, பல்வேறு மாவட்டங்களில், 30 திருட்டு வழக்குகள் உள்ளன; சிலவற்றில், சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார்.தனது வீட்டில் நகையை உருக்கும் இயந்திரம் வாங்கி வைத்திருப்பதும், திருடும் நகைகளை உருக்கி பிஸ்கட் மற்றும் காயின் வடிவில் மாற்றி வைத்துக் கொள்வது தெரியவந்தது.ஒவ்வொரு முறையும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் போது, தனது நண்பர்களின் உதவியுடன் ஜாமினில் வெளியே வருவார். சிறையில், சிலரை தனது நண்பர்களாக்கி, அவர்களையும் ஜாமினில் வெளியே வரச் செய்து, தனது திருட்டு தொழிலுக்கு உதவியாக வைத்துக் கொள்வதை, வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பது, தெரியவந்தது.'சிறையில் இருந்து வெளியே வந்தாலும், மீண்டும் இதே திருட்டு தொழிலில் தான் ஈடுபட போகிறேன்; வேறெந்த தொழிலும் தெரியாது' என, அவர் கூறியது, போலீசாரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X