காங்., தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்கக்கோரி தீர்மானம்

Updated : செப் 19, 2022 | Added : செப் 19, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
ஜெய்ப்பூர்-காங்., தலைவர் பதவியை ராகுல் ஏற்க வலியுறுத்தி, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, அக்., 17ல் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல், வரும் 24ல் துவங்க உள்ளது.கட்சித் தலைவர் பதவியை, 2019ல் ராஜினாமா செய்த ராகுல், மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்கும்படி, மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜெய்ப்பூர்-காங்., தலைவர் பதவியை ராகுல் ஏற்க வலியுறுத்தி, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



latest tamil news


காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, அக்., 17ல் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல், வரும் 24ல் துவங்க உள்ளது.கட்சித் தலைவர் பதவியை, 2019ல் ராஜினாமா செய்த ராகுல், மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்கும்படி, மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதை ராகுல் நிராகரித்து வருகிறார்.

இந்நிலையில், கட்சித் தலைவர் பதவியில் ராகுலை நியமிக்க வலியுறுத்தி, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை முதல்வர் அசோக் கெலாட் முன்மொழிந்தார். அதுபோல, முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ள சத்தீஸ்கரிலும், நேற்று நடந்த கட்சிக் கூட்டத்திலும் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


latest tamil news


சோனியா மற்றும் ராகுல் ஆகியோர், காங்., தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை முன்நிறுத்துவதாக தகவல் வெளியான நிலையில், அவரது ஆட்சி நடக்கும் மாநிலத்திலேயே ராகுல் போட்டியிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் தலைவர் பதவிக்கு ராகுல் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என, அந்த கட்சியின் அதிருப்தி தலைவர்கள் ஏற்கனவே போர்க்கொடி துாக்கியுள்ளனர். வாக்காளர் பட்டியலை வெளியிடும்படியும் வற்புறுத்தி வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த லோக்சபா எம்.பி., சசி தரூரை, தலைவர் தேர்தலில் நிறுத்தவும், அவர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-செப்-202214:49:24 IST Report Abuse
சிந்தனை அதான் நல்லது. சமாதி கட்டிடலாம்...
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
19-செப்-202214:41:34 IST Report Abuse
venugopal s எப்படியும் பாஜகவை மீண்டும் வெற்றி பெற வைப்பது என்று முடிவெடுத்து விட்டார்களோ?
Rate this:
Cancel
19-செப்-202211:27:44 IST Report Abuse
ராமகிருஷ்ணன் இதற்காக தான் நடைபயணம். காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் தானாக முன்வந்து மீண்டும் நேருவின் குடும்பத்தினர் தலைமை ஏற்று கொள்ள வேண்டும் என திட்டம் வகுத்து உள்ளனர். இது பி ஜே பி யின் வளர்ச்சிக்கு உதவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X