இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: சக மாணவியர் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவி கைது

Updated : செப் 19, 2022 | Added : செப் 19, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
இந்திய நிகழ்வுகள் பள்ளியில் நாட்டு வெடிகுண்டு முன்னாள் மாணவர்கள் சிக்கினர் கோல்கட்டா-மேற்கு வங்கத்தில் ஒரு பள்ளியின் மேற்கூரையில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் முன்னாள் மாணவர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, வடக்கு பர்கானாஸ்


இந்திய நிகழ்வுகள்
பள்ளியில் நாட்டு வெடிகுண்டு முன்னாள் மாணவர்கள் சிக்கினர்


கோல்கட்டா-மேற்கு வங்கத்தில் ஒரு பள்ளியின் மேற்கூரையில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் முன்னாள் மாணவர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் டிட்டாகர் என்ற இடத்தில் உள்ள பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரையில், நேற்று முன் தினம் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அன்று நள்ளிரவே நான்கு பேர் பிடிபட்டனர். அவர்கள் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. அங்கு பயிலும் சில மாணவர்களிடம் உள்ள முன்விரோதம் காரணமாக, இவர்கள் இச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ௧௦ நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


கலவரத்தை துாண்ட பயிற்சி 2 மாநிலங்களில் 4 பேர் கைதுபுதுடில்லி-பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டது தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 40 இடங்களில் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பினரின் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று சோதனை நடத்தி நான்கு பேரை கைது செய்தனர்.

என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பயங்கரவாத செயலுக்கு திட்டமிட்டது மற்றும் மதக் கலவரத்தை துாண்ட பயிற்சி முகாம் நடத்தியது தொடர்பாக பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த அப்துல் காதர், ஷேக் சதுல்லா, முகமது இம்ரான் மற்றும் முகமது அப்துல் மொபின் ஆகிய நான்கு பேரை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.


latest tamil newsஇதைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கை ஆக., 26லிருந்து விசாரித்தது. இந்நிலையில், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 40 இடங்களில் நேற்று, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. டிஜிட்டல் சாதனங்கள், கத்திகள், ஆவணங்கள் மற்றும் 8.31 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சக மாணவியர் குளிப்பதை 'வீடியோ' எடுத்தசண்டிகர் பல்கலை மாணவி அதிரடி கைதுமொகாலி-சண்டிகர் பல்கலை விடுதியில் மாணவியர் குளிப்பதை 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சக மாணவி கைது செய்யப்பட்டுஉள்ளார். இந்த விவகாரத்தில், பல்கலை நிர்வாகம் அமைதியாக இருப்பதாக மாணவியர் நேற்று முன் தினம் நள்ளிரவில் இருந்து போராட்டத்தில் குதித்துஉள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலை விடுதியில் ஏராளமான மாணவியர் தங்கி படிக்கின்றனர்.latest tamil newsபோராட்டம்

அதில் 60 மாணவியர் குளிப்பதை சக மாணவி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த விஷயத்தை அறிந்து மாணவியர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குளியல் அறையில் ரகசியமாக வீடியோ எடுத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்கலை வளாகத்தில் மாணவியர் நேற்று முன் தினம் இரவு போராட்டத்தில் குதித்தனர்.பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இந்த விஷயத்தை மூடி மறைக்க முயற்சிப்பதாக குற்றஞ் சாட்டினர்.இதனால், மொகாலி மட்டுமின்றி மாநிலம் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமரசம் பேசியும் மாணவியர் விடிய விடிய போராட்டம் நடத்தினர். மாணவர்கள் யாராவது இந்த வீடியோ எடுத்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், சக மாணவி ஒருவரே குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தி இந்த வீடியோக்களை எடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. விடுதியில் தங்கி படிக்கும் எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு படிக்கும் அந்த மாணவியை போலீசார் கைது செய்தனர். குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்து, ஹிமாச்சல பிரதேசம் சிம்லாவில் உள்ள தன் ஆண் நண்பருக்கு வீடியோக்களை அனுப்பியதை, அந்த மாணவி ஒப்புக் கொண்டார். சிம்லா பல்கலையில் படிக்கும் அந்த இளைஞர் இந்த வீடியோக்களை இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோக்களுக்காக இருவருக்கும் ஏராளமாக பணம் கிடைத்துள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிம்லாவில் உள்ள மாணவரை கைது செய்ய பஞ்சாப் போலீஸ் தனிப்படை விரைந்து உள்ளது.

வருத்தம்

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியர் எட்டு பேர் தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். ஆனால் இந்த தகவலை பல்கலை நிர்வாகம் மற்றும் போலீசார் மறுத்துள்ளனர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், “சண்டிகர் பல்கலையில் நடந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர்,” என்றார்.


தமிழக நிகழ்வுகள்
94 கிலோ கஞ்சா பறிமுதல்பெண் உட்பட இருவர் கைது


கோவை;ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்த, பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்; 94 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை அவிநாசி சாலை தொட்டிபாளையம் பிரிவு அருகே பீளமேடு போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது ஒரு காரில் 10 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இருகூரை சேர்ந்த கங்காபிரசாத், 26, என்ற நபர் கைது செய்யப்பட்டார். கார், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பதை, தொழிலாக செய்து வந்துள்ளார்.


குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைதுமேட்டுப்பாளையம்;காரமடையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.காரமடை மங்கலக்கரைப்புதுாரை சேர்ந்தவர் ராகுல், 23. இவர் காரமடை பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது, காரமடை போலீசில் பல வழக்குகள் உள்ளன.இதை அடுத்து கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் சமீரன், ராகுலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து போலீசார், ராகுலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் பீளமேடு நேரு நகரில் வீடு வாடகைக்கு எடுத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் வீட்டை சோதனையிட்டபோது, 84 கிலோ கஞ்சா இருந்தது.கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வீட்டில் இருந்த வைஷ்ணவி,20 என்ற பெண்ணையும் கைது செய்தனர்.இருவரும் தம்பதியா, கஞ்சா விற்பனையில் இறங்கியது எப்படி என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


போலி சான்றிதழ் மூலம் நிலம் விற்பனை: சார்பதிவாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு


ராமநாதபுரம்--ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இறந்தவர் பெயரில் உயிர்வாழ் சான்றிதழ் வாங்கி நிலத்தை விற்ற பவர் ஏஜென்ட் தாமரைச்செல்வி, அவருக்கு உதவிய அரசு டாக்டர் சோணைமுத்து, சார்பதிவாளர் ஆதிமூலம், பத்திர எழுத்தர் சேவியர்ராஜன் பிரிட்டோ உள்ளிட்ட 7 பேர் மீது நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் தமிழ்வேந்தன் 32. இவரது தாத்தா நம்புபிச்சைக்கு சொந்தமான பூர்வீக நிலம் ராமேஸ்வரம் பகுதியில் 1.82 ஏக்கர் உள்ளது. நம்புபிச்சை, அவரது சகோதரர் நம்புராஜன் ஆகியோர் பூர்வீக சொத்தில் 54 சென்ட் நிலத்தை 2010 மார்ச்சில் ராமேஸ்வரம் பர்வதம் பகுதி ஆதிமூலம் மனைவி தாமரைசெல்விக்கு பொது அதிகாரம் கொடுத்து பவர்ஏஜென்ட் ஆக நியமித்தனர்.

2010 டிச., 28 ல் நம்புபிச்சை இறந்தார்.இதை பயன்படுத்தி தாமரைசெல்வி, நம்புபிச்சை உயிருடனிருப்பது போன்ற போலி உயிர்வாழ் சான்றிதழை தங்கச்சிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் சோணைமுத்திடம் பெற்றார். அந்த சான்றிழை பயன்படுத்தி ராமேஸ்வரம் அன்புதாசனுக்கு 37 சென்ட் நிலத்தை ராமேஸ்வரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார்.

இதுகுறித்து தமிழ்வேந்தன் நிலஅபகரிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். நீதிமன்றம் உத்தரவின்பேரில் தாமரைசெல்வி, அன்புதாசன், உதவிய சார் பதிவாளர் ஆதிமூலம், பத்திர எழுத்தர் சேவியர் ராஜன் பிரிட்டோ, சோணைமுத்து, நம்புபிச்சை மகன் முனியசாமி, உச்சிபுளி சேதுபதி மீது நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


அணு விஞ்ஞானி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளைதிருநெல்வேலி--திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களின் அணு விஜய் குடியிருப்பு செட்டிகுளம் கடற்கரை அருகே உள்ளது.

விஞ்ஞானிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனி குடியிருப்பில் விஞ்ஞானி அசோகன் 55 வசித்து வந்தார். அண்மையில் இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கைகா அணுமின் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். ஆளில்லாத அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகள், ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது.அப்பகுதியில் விஞ்ஞானி ராமன் வீட்டின் பூட்டையும் உடைத்து திருட முயற்சி நடந்தது. 24 மணி நேரமும் போலீஸ் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பையும் மீறி இச்சம்பவம் நடந்துள்ளது.


95 சவரன், 45 கிலோ வெள்ளி கொள்ளைமேலுார்--மதுரை, மேலுார் அருகே சின்னசூரக்குண்டில் மென்பொருள் நிறுவன இயக்குனரின் வீட்டில், 95 சவரன் நகைகள், 45 கிலோ வெள்ளி, 1 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

மதுரை மாவட்டம், மேலுார் அருகே சின்னசூரக்குண்டுவைச் சேர்ந்தவர் பிரபுசங்கர், 45; மென்பொருள் நிறுவன இயக்குனர். இவர், பெங்களூரில் மனைவி வித்யா, 43, மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வசிக்கிறார்.அவருக்கு மேலுார் நகராட்சி, குமார் நகரில் வீடு உள்ளது. அந்த வீட்டை மனைவி வித்யாவின் தந்தை பாலகிருஷ்ணன் பராமரித்து வருகிறார். நேற்று மதியம் வீட்டுக்கு வந்த பாலகிருஷ்ணன், பின்பக்க ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்தார்.

போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அதிகாலை 3:00 மணிக்கு முகத்தை மூடியபடி வந்த ஒருவர், கேமராவை துணியால் மூடியது பதிவாகி இருந்தது.அந்த நபர் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து, இரண்டு அறைகளில் இருந்த நான்கு பீரோக்களில், 95 சவரன் நகைகள், 45 கிலோ வெள்ளிப்பொருட்கள், 1.10 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
19-செப்-202217:56:50 IST Report Abuse
DVRR சக மாணவியர் குளிப்பதை 'வீடியோ' எடுத்த சண்டிகர் பல்கலை மாணவி???காரணம் பாருங்கள்???ஏன் அவள் அப்படி தாள்???1) அவளுடைய ஆண் நண்பன் அவளுக்கு இவ்வளவு பணம் கொடுக்கின்றேன் இதை செய் 2) அந்த ஆண் நண்பனுக்கு இன்னொரு குழுமம் இப்படி செய்தால் உனக்கு இவ்வளவு தருகின்றான் என்று சொன்னதால்.முடிவை பிடியுங்கள் அந்த குழுமத்தை இந்த ஆண்மகனை இந்த பெண்ணை நேர்வழியில் செல்ல ஆரம்பிக்கும்
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
19-செப்-202216:51:58 IST Report Abuse
R Ravikumar மனித மனங்களின் மறுபக்க வக்கிரங்கள் அந்த பெண் சக மாணவியரின் குளியல் விடீயோக்களை தனது காதலனுக்கு அனுப்புவது என்பதை எப்படி எடுத்து கொள்வது ? இது விபசாரம் அதுவும் கணவன் அனுமதியுடன் செய்வது போன்ற வக்கிரம் . மேலும் பல வலைத்தளங்கள் இதற்கு பணம் தருகின்றன . பணத்திற்காகவும் இது செய்ப்பட்டிருக்கிறது . இன்னொன்று கவனித்தீர்களா ? இந்த பெண்ணின் முகம் எங்கும் காட்டப்படவில்லை . ஆனால் அந்த காதலனின் முகம் மூச்சுக்கு முந்நூறு முறை வட இந்திய டீவீகளில் காட்டப்படுகிறது . ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும் அரசும் , நீதிமன்றமும் , பெண்ணிய அமைப்பும் இப்போது வாயில் கொழுக்கட்டை வைத்து இருக்கிறார்கள் . பெண்ணின் முகம் காட்டமாட்டார்கள் , தண்டனை ஆணுக்கு தருவது போல இருக்காது . அந்த பெண் ஒரு வாரத்தில் வெளியே வந்து விடுவாள் வேறொரு கல்லூரியில் கூட சேர்ந்து விடுவாள் . பெண்ணியம் பேசும் பெண்கள் / தலைவர்கள் எங்கு இருந்தாலும் வரவும் .
Rate this:
Cancel
19-செப்-202210:36:17 IST Report Abuse
அப்புசாமி அந்த மாணவி தனது வீடியோவைத்தான் எடுத்து தன் தோழனுக்கு அனுப்பி வைர்துள்ளார். அதை சகமாணவியர் குளிக்கும் வீடியோன்னு புரளியக்கிளப்பி அந்தப்பொண்ணோட அந்தரங்கமெல்லாம் வெளியே வந்து தற்கொலையில் முடிந்தாலும் ஆச்சரியமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X