சென்னையில் தரையிறங்கிய பிரான்ஸ் போர் விமானம்| Dinamalar

சென்னையில் தரையிறங்கிய பிரான்ஸ் போர் விமானம்

Added : செப் 19, 2022 | கருத்துகள் (3) | |
சென்னை-பிரான்ஸ் நாட்டின் விமானப் படை விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக, இரு தினங்களுக்கு முன், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.பிரான்ஸ் நாட்டின் விமானப் படைக்கு சொந்தமானது, 'ஆர்மி டி எல் ஏர்' என்ற விமானம்.'ஏர்பஸ்' நிறுவனத்தின், 'ஏ 400 எம் அட்லஸ்' என்ற வகையைச் சேர்ந்த இந்த விமானம், ராணுவத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.மணிக்கு, 880 கி.மீ., வேகம்
Armée de l air ,Chennai, சென்னை, பிரான்ஸ் போர் விமானம், ஆர்மி டி எல் ஏர்,  France Fighter Flight,

சென்னை-பிரான்ஸ் நாட்டின் விமானப் படை விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக, இரு தினங்களுக்கு முன், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.



பிரான்ஸ் நாட்டின் விமானப் படைக்கு சொந்தமானது, 'ஆர்மி டி எல் ஏர்' என்ற விமானம்.'ஏர்பஸ்' நிறுவனத்தின், 'ஏ 400 எம் அட்லஸ்' என்ற வகையைச் சேர்ந்த இந்த விமானம், ராணுவத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.மணிக்கு, 880 கி.மீ., வேகம் செல்லக்கூடியது. வானில் பறந்தபடி, மற்றொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் திறன் உடையது. முறையான விமான ஓடுபாதை இல்லாத தளத்தில் கூட, இந்த விமானத்தை தரையிறக்க முடியும்.கனரக ஹெலிகாப்டர், போர் வாகனங்களை எடுத்துச் செல்வதற்கும், பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளிலும், இந்த விமானம் பயன்படுத்தப்படும்.



சிங்கப்பூரில் இருந்து அபுதாபி நோக்கி, இந்த பிரான்ஸ் விமானப் படை விமானம் சென்றது. அப்போது, விமானத்திற்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதால், 16ம் தேதி பிற்பகல் 2:20 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்பிய பின், மாலை 5:00 மணியளவில், அபுதாபி புறப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X