மொபைல் போன்தி ருடியவர் கைது| Dinamalar

மொபைல் போன்தி ருடியவர் கைது

Added : செப் 19, 2022 | |
மறைமலை நகர் : மறைமலை நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ஜி.எஸ்.டி., சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கினர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல, துரத்தி சென்று போலீசார் பிடித்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், தியாகி அண்ணா மலை நகர் பகுதியை சேர்ந்த மணிஅரசன், 22, என தெரிய



மறைமலை நகர் : மறைமலை நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ஜி.எஸ்.டி., சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கினர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல, துரத்தி சென்று போலீசார் பிடித்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், தியாகி அண்ணா மலை நகர் பகுதியை சேர்ந்த மணிஅரசன், 22, என தெரிய வந்தது.



மணிஅரசன் மற்றும் நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து மறைமலை நகர் சுற்றுப் பகுதிகளில் இரவு நேரங்களில் மொபைல் போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிந்தது.அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார், மணிஅரசனின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X