ஆசிரியர் வீட்டில் 40 சவரன் திருட்டு

Added : செப் 19, 2022 | |
Advertisement
புதுச்சேரி : ஆசிரியர் வீட்டில் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 40 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றர்.புதுச்சேரி, பூமியான்பேட்டையை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி ஜெனிஷா,38. இருவரும், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் மகன், 9 வயதில் மகள் உள்ளனர்.இருவரும் பணிக்கு செல்வதால், ஜெனிஷா தனது நகைகளை



புதுச்சேரி : ஆசிரியர் வீட்டில் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 40 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றர்.புதுச்சேரி, பூமியான்பேட்டையை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி ஜெனிஷா,38. இருவரும், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் மகன், 9 வயதில் மகள் உள்ளனர்.இருவரும் பணிக்கு செல்வதால், ஜெனிஷா தனது நகைகளை ஒரு பையில் வைத்து, அதை கட்டிலுக்கு கீழே பாதுகாப்பாக மறைத்து வைப்பது வழக்கம்.

கடந்த 8ம் தேதி காலை பார்த்தபோது, கட்டிலுக்கு கீழே துணிப்பையில் வைத்திருந்த 40 சவரன் நகையை காணவில்லை.திருடு போன நகைகளின் மதிப்பு 12 லட்சம் ரூபாய். ஜெனிஷா அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.கடந்த ஒன்றரை மாதமாக வீட்டில் சீரமைப்பு பணி நடந்துள்ளது. அந்த வேலைக்கு வந்தவர்கள் நகையை திருடிச் சென்றனரா? அல்லது வேறு யாராவது திருடி சென்றார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X