வாலிபரை கொல்ல முயன்ற 3 ரவுடிகளுக்கு 'காப்பு'

Added : செப் 19, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு : பச்சையம்மன் கோவில் பகுதியில், வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில், மூன்று ரவுடிகளை, போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு, பச்சையம்மன் கோவில், நேதாஜி தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் மணிகண்டன், 23; கூலி தொழிலாளி. இவர் மனைவி நிவேதாவுடன் வசித்து வருகிறார். இவர்களின் அடுத்த வீட்டில் வசித்து வருபவர் விஜி.இந்நிலையில், நேற்று முன்தினம், விஜி என்பவர் எங்கே என,



செங்கல்பட்டு : பச்சையம்மன் கோவில் பகுதியில், வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில், மூன்று ரவுடிகளை, போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு, பச்சையம்மன் கோவில், நேதாஜி தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் மணிகண்டன், 23; கூலி தொழிலாளி. இவர் மனைவி நிவேதாவுடன் வசித்து வருகிறார்.

இவர்களின் அடுத்த வீட்டில் வசித்து வருபவர் விஜி.இந்நிலையில், நேற்று முன்தினம், விஜி என்பவர் எங்கே என, மணிகண்டனிடம், அதே பகுதியைச் சேர்ந்த சிவா, சுரேஷ் மற்றும் சந்திரபிரசாத் ஆகியோர் கேட்டனர். அப்போது, அவர், தெரியாது என கூறினார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள், மணிகண்டனை, கத்தியால் வெட்டி தப்பிச் சென்றனர்.இதில், பலத்த காயமடைந்த மணிகண்டனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடிகள் தட்டான்மலை சுரேஷ் 32, பெரியநத்தம் சந்திரபிரசாத், 32, பச்சையம்மன் கோவில் சிவா, 22, ஆகிய மூன்று பேரை கைது செய்து, செங்கல்பட்டு முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X