சிறுவனை தாக்கிய வாலிபர் கைது| Dinamalar

சிறுவனை தாக்கிய வாலிபர் கைது

Added : செப் 19, 2022 | |
கடலுார் : கடலுார், புதுப்பாளையம் லோகம்பாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரன் 47; கூலித்தொழிலாளி. ஆர்.பி. நகரைச் சேர்ந்தவர் சீனுவாசன் 21. சம்பவத்தன்று சீனுவாசன் புதுப்பாளையம் கங்கையம்மன் கோவில் அருகில் நின்றிருந்தார்.அப்போது அவ்வழியாக வீரனின் 17 வயது மகன், நடந்து சென்றார். சீனுவாசன் அவரை வழிமறித்து 50 ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால், இருவருக்கும் தகராறு



கடலுார் : கடலுார், புதுப்பாளையம் லோகம்பாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரன் 47; கூலித்தொழிலாளி. ஆர்.பி. நகரைச் சேர்ந்தவர் சீனுவாசன் 21. சம்பவத்தன்று சீனுவாசன் புதுப்பாளையம் கங்கையம்மன் கோவில் அருகில் நின்றிருந்தார்.அப்போது அவ்வழியாக வீரனின் 17 வயது மகன், நடந்து சென்றார். சீனுவாசன் அவரை வழிமறித்து 50 ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சீனுவாசன், வீரனின் மகனை ஆபாசமாக திட்டி, தாக்கினார்.இது குறித்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சீனுவாசனை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X