இளம் பெண் துாக்கிட்டு தற்கொலை| Dinamalar

இளம் பெண் துாக்கிட்டு தற்கொலை

Added : செப் 19, 2022 | |
பாகூர், : இளம் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கன்னியக்கோவில் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார், 32; தனியார் பாரில், உதவி மேலாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி மதிவதனி, 22; இரண்டு வயதில் ஜெயவேல் என்ற ஆண் குழந்தை உள்ளது.நேற்று முன்தினம் இரவு வினோத்குமாரின் தாய் வேல்விழி, மதிவதனியிடம், என் மகனுக்கு



பாகூர், : இளம் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கன்னியக்கோவில் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார், 32; தனியார் பாரில், உதவி மேலாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி மதிவதனி, 22; இரண்டு வயதில் ஜெயவேல் என்ற ஆண் குழந்தை உள்ளது.நேற்று முன்தினம் இரவு வினோத்குமாரின் தாய் வேல்விழி, மதிவதனியிடம், என் மகனுக்கு உடல்நிலை சரியில்லை. நீ அவனை சரியாக கவனித்து கொள்ளவில்லை என கூறி உள்ளார்.



இதனால், மனமுடைந்த மதிவதனி யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். வினோத்குமார் நேற்று வேலைக்கு சென்று விட்ட நிலையில், பகல் 12.30 மணியளவில், மதிவதனி வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், மதிவதனியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். ஏட்டு பிரிமியர் ரமேஷ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X