அருணகிரிநாதர் திருப்புகழ்மன்றத்தின் 33ம் ஆண்டு விழா| Dinamalar

அருணகிரிநாதர் திருப்புகழ்மன்றத்தின் 33ம் ஆண்டு விழா

Added : செப் 19, 2022 | |
புதுச்சேரி : புதுச்சேரி தமிழ் சங்கத்தில் அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றம் சார்பில் 33வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.காலை 8.30 மணிக்கு மங்கள இசையோடு திருஞானசம்பந்தர் அரங்கம் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து திருப்புகழ் கொடியேற்றல், தீபம் ஏற்றுதல், திருப்புகழ் இசை நடைபெற்றது.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அருணகிரிநாத சுவாமிகள் தலைமை தாங்கினார். செயற்குழு
அருணகிரிநாதர் திருப்புகழ்மன்றத்தின் 33ம் ஆண்டு விழாபுதுச்சேரி : புதுச்சேரி தமிழ் சங்கத்தில் அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றம் சார்பில் 33வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.காலை 8.30 மணிக்கு மங்கள இசையோடு திருஞானசம்பந்தர் அரங்கம் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து திருப்புகழ் கொடியேற்றல், தீபம் ஏற்றுதல், திருப்புகழ் இசை நடைபெற்றது.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அருணகிரிநாத சுவாமிகள் தலைமை தாங்கினார். செயற்குழு அருள்செல்வம் வரவேற்றார்.துணை தலைவர் சீனுவேணுகோபால் நோக்கவுரை, தலைவர் ரவிசங்கர் தலைமை உரை ஆற்றினர்.தமிழ்சங்க தலைவர் முத்து, இந்து அறநிலையத் துறை நிர்வாக அதிகாரி ரம்யா ராமச்சந்திரன், மூத்த குடிமக்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் வேணுகோபால் வாழ்த்திப் பேசினர்.பேராசிரியர் லட்சுமிதத்தை தலைமையில் மகளிர் அரங்கம் நடந்தது. ரங்கநாயகி வளவன் முன்னிலை வகித்தார்.திருப்புகழ் காட்டிய மனைவி தலைப்பில் பேராசிரியை நீலம் அருள்செல்வி், மொழி உணர்வு பற்றி உதவி பேராசிரியை கோகிலா, தமிழகம் குறித்து ஆசிரியை ரேவதிபிரியா, வேலும், மயிலும், கொடியும் பற்றி டாக்டர் சங்கர்தேவி ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.அறுபடை வீட்டு திருப்புகழ் இசை நிகழ்ச்சி நடந்தது.இசை வாத்தியங்களின் முக்கியத்துவம் பற்றி டாக்டர் ரத்தின ஜனார்த்தனன், பன்னிரு திருமுறை மன்றத் தலைவர் நாராயணசாமி, பேராசிரியர் ராஜமாணிக்கம், அருண், சீனுவாசன், அழகுராமசாமி, ஓய்வு பெற்ற நீதிபதி சேது முருகபூபதி ஆகியோர் கூறினர்.திருவேளைக்காரன் வகுப்பு பற்றி மன்ற தலைவர் ரவிசங்கர் கூறினார்.பேராசிரியர் நெய்தல்நாடன் தலைமையில் ஆய்வரங்கம் நடந்தது. அருணகிரியார் செய்த கடமைகள் தலைப்பில் பேராசிரியர் முருகையன் பேசினார்.திருப்புகழ் காட்டிய முப்பொருள் தலைப்பில் பேராசிரியர் வேல் கார்த்திகேயன், திருக்குறள் தலைப்பில் பேராசிரியர் வள்ளி, புலவர்கள் தலைப்பில் பேராசிரியர் கோவலன் ஆகியோர் பேசினர். துணை செயலாளர் ராமதாஸ் காந்தி நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X