3 மாதத்தில் 60 சிலைகள் கடத்தல்: டி.ஜி.பி., ஜெயந்த் முரளி தகவல்

Updated : செப் 19, 2022 | Added : செப் 19, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை--''கடந்த மூன்று மாதங்களில், 60 சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு இருப்பதை விசாரணையில் கண்டு பிடித்துள்ளோம்; இதில், 10 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன,'' என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளி தெரிவித்தார். போலீசாருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, 'டாங்கர்' என்ற, தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், ரத்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை--''கடந்த மூன்று மாதங்களில், 60 சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு இருப்பதை விசாரணையில் கண்டு பிடித்துள்ளோம்; இதில், 10 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன,'' என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளி தெரிவித்தார்.



latest tamil news


போலீசாருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, 'டாங்கர்' என்ற, தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், ரத்த அழுத்தமானி வழங்குவதற்காக, நிதி திரட்டும் நோக்கில், 50 கி.மீ., துார மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் மாரத்தானை, டி.ஜி.பி., ஜெயந்த் முரளி துவக்கி வைத்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:'டாங்கர்' அறக்கட்டளை வாயிலாக, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், ரத்த அழுத்தமானி வழங்க, முழு மாரத்தான் போட்டி நடத்தி, 15 லட்சம் ரூபாய் நிதி திரட்டி உள்ளோம்.தமிழகத்தில் இதுவரை, 550 காவல் நிலையங்களில், ரத்த அழுத்தமானி கருவிகள் உள்ளன. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகளவில் உள்ளது; 6,000 பேர் வரை மாற்று சிறுநீரகம் பெறுவதற்காக காத்திருக்கின்றனர்.போலீசார் பாதுகாப்பு பணியை முடித்து, பிரியாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.ரத்த அழுத்தம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, வாழ்க்கை முறையை மாற்றினாலே மாற்றம் வரும்.


latest tamil news


கடந்த மூன்று மாதங்களில் மட்டும், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 60 சிலைகளை கண்டறிந்துள்ளோம். இதில், 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.வெளிநாட்டுக்கு சென்று முயற்சி எடுத்தால், ஒரு மாதங்களில் இதர சிலைகளை தமிழகத்திற்கு எடுத்து வர முடியும்.கடத்தப்பட்ட சிலைகளின் மதிப்பு, 72 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம். விரைவில் வெளிநாடு சென்று, சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
19-செப்-202213:05:54 IST Report Abuse
Nellai tamilan ஆ ராசா சொன்ன மன நலம் குன்றிய அரசு ஆட்சி நடத்தும் அழகு பிரமாதம்
Rate this:
Cancel
Senthil Kumar - chennai,இந்தியா
19-செப்-202213:02:58 IST Report Abuse
Senthil Kumar கடத்தியவன் எல்லோரும் கடவுள் உண்டு என்று சொன்னவன் மணி இதில் வேடிக்கை என்னவென்றால் இதுக்கும் பெரியாறு மாட்டிக்கிறார் இந்த ... என்னவென்பது ,தவறு செய்பவர்கள் அனைவரும் ஹிந்து மத வெறியர்கள் தேச பற்றாளர்கள், கடத்தியவர் பெயர்கள் சொன்னால் அவர்கள் முகத்திரை கிழிக்கபடும் .
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
19-செப்-202211:38:37 IST Report Abuse
Raa இதை சொல்ல வெக்கமாக இல்லை? எந்த லக்ஷணத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை வேறு? என்ன வேலை செய்கிறார்கள் கோயிலை பாதுகாப்பாக வைக்காமல்? தண்ட சம்பளம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X