விழுப்புரம் 1வது வார்டில் கண் பரிசோதனை முகாம்| Dinamalar

விழுப்புரம் 1வது வார்டில் கண் பரிசோதனை முகாம்

Added : செப் 19, 2022 | |
விழுப்புரம் ; ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.விழுப்புரத்தில் நடந்த முகாமிற்கு, நகராட்சி 1வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கோல்டு சேகர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வார்டு செயலாளர் ஷாஜகான், அவை



விழுப்புரம் ; ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.விழுப்புரத்தில் நடந்த முகாமிற்கு, நகராட்சி 1வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கோல்டு சேகர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வார்டு செயலாளர் ஷாஜகான், அவை தலைவர் பஞ்சாட்சரம் முன்னிலை வகித்தனர்.இதில், டாக்டர் பவித்ரா தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.அப்போது, அ.தி.மு.க., நிர்வாகிகள் முருகன், சரவணன், கார்த்திக், சுரேஷ், சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X