ஜெபக்கூடத்துக்கு எதிராக வீடுகளில் கருப்புக்கொடி

Added : செப் 19, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
அவிநாசி : அவிநாசி அருகே அனுமதியின்றி செயல்படும் ஜெபக்கூடத்திற்கு எதிராக, அப்பகுதி மக்கள், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த செம்பியநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட நேரு நகரில் ஜெபக்கூடம் செயல்படுகிறது. மதம் மாற்றும் முயற்சியும் இங்கு நடப்பதாக கூறி, அங்கு வசிக்கும் தியாகராஜன் என்பவர், செப்., 4ம் தேதி அவிநாசி
அவிநாசி,  ஜெபக்கூடம், பிரார்த்தனை, Avinasi, prayer,



அவிநாசி : அவிநாசி அருகே அனுமதியின்றி செயல்படும் ஜெபக்கூடத்திற்கு எதிராக, அப்பகுதி மக்கள், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த செம்பியநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட நேரு நகரில் ஜெபக்கூடம் செயல்படுகிறது.

மதம் மாற்றும் முயற்சியும் இங்கு நடப்பதாக கூறி, அங்கு வசிக்கும் தியாகராஜன் என்பவர், செப்., 4ம் தேதி அவிநாசி போலீசில், புகார் அளித்தார்.அதன்படி, அவிநாசி தாசில்தார் ராஜேஷ், செப்., 7ம் தேதி இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சு நடத்தினார்.அனுமதியின்றி கட்டடம் கட்டி அதில் உரிய அனுமதி பெறாமல் ஜெபக்கூடமாக பயன்படுத்தியது, ஆய்வில் தெரிந்தது.

பிரார்த்தனை நடத்த ஜெபக்கூடத்தை பயன்படுத்தக் கூடாது என தாசில்தார் தடை விதித்து உத்தரவிட்டார்.இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முன்பை விட அதிக அளவில் ஆட்கள் வரவழைக்கப்பட்டு, ஜெபக்கூடத்தில் பிரார்த்தனை நடந்து வருகிறது.நேரு நகர் குடியிருப்பில் உள்ள பொதுமக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்கள் வீடுகள் முன், நேற்று கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
19-செப்-202218:03:09 IST Report Abuse
Nepolian S அவன் அவன் விருப்பம் இல்லாமல் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாற்ற முடியாது....இது தனி மனித சுதந்திரம்.... தாங்கள் விரும்பிய மதத்தை வழிபட... கூப்பாடு போடுவதால் ஒன்றும் ஆகாது
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
19-செப்-202217:14:19 IST Report Abuse
NicoleThomson நாங்க போட்ட பிச்சையில் ஆட்சி பன்றாருங் என்று எங்க அன்னன் ஜோர்ஜு சொல்லிட்டாரு என்ன பண்ணமுடிந்தது , உதவியை வாங்கி கொண்ட அரசு மவுனமாத்தான் இருக்கும்
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
19-செப்-202216:30:00 IST Report Abuse
jayvee இது கிருத்துவர்களுக்கான அரசு என்று சபாநாயகர் சொல்லிவிட்டார்.. பாவம் போலீஸ் என்ன செய்யமுடியும்.. ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X