எலி 'பேஸ்ட்' சாப்பிட்ட  பெண் பலி

Added : செப் 19, 2022 | |
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி ஆட்டோ டிரைவர் கொலை விவகாரத்தில், எலிபேஸ்ட் சாப்பிட்ட கள்ளக்காதலி சிகிச்சை பலனின்றி இறந்தார்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி, காந்தி நகரை சேர்ந்தவர் சக்திவேல், 36; ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் களத்துமேடுஆட்டோ டிரைவர் சுமன். அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி பூமிகா, 22. இவர், இன்ஸ்டாகிராமில் சினிமா நடிகை போல்பாடல்களை



பண்ருட்டி : பண்ருட்டி ஆட்டோ டிரைவர் கொலை விவகாரத்தில், எலிபேஸ்ட் சாப்பிட்ட கள்ளக்காதலி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி, காந்தி நகரை சேர்ந்தவர் சக்திவேல், 36; ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் களத்துமேடுஆட்டோ டிரைவர் சுமன். அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி பூமிகா, 22. இவர், இன்ஸ்டாகிராமில் சினிமா நடிகை போல்பாடல்களை பதிவிட்டு வந்தார்.இதன் காரணமாக, தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கணவரை பிரிந்து தனியாக வசித்த பூமிகா, ஆட்டோவில் பண்ருட்டிக்கு பேக்கரி கடைக்கு வேலை செல்லும்போது சக்திவேல், சுமன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.பூமிகாவுடன் சக்திவேல் தொடர்பில் இருப்பதை அறிந்த சுமன், சக்திவேலை கண்டித்தார். இதற்கு சக்திவேல் எதிர்ப்புதெரிவித்ததால், அவரை சுமன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 9ம் தேதி வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து,புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சுமன் உட்பட 4 பேரை கைது செய்தனர்; இருவரை தேடிவந்தனர்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி, எலிபேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்த பூமிகா, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசுமருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று அதிகாலை 4:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பூமிகா இறந்தார். இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார்வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X